முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த முறை வாய்ப்பை வீணடிக்க மாட்டேன்: ஷிகார் தவான்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 13 - கடந்த முறை போல இந்த முறை வாய்ப்பை வீணடிக்க மாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இட ம் பிடித்துள்ள டெல்லி பேட்ஸ்மேன் ஷிகார் தவான் தெரிவித்து உள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. 

இதன் முதல் போட்டி சென்னைசேப் பாக்கம் மைதானத்தில் வரும் 22 -ம் தே தி துவங்க இருக்கிறது. இதற்காக இந்தி ய அணி ஆயத்தமாகி வருகிறது. 

ஆஸி. அணிக்கு எதிரான முதல் 2 டெ ஸ்டுக்காக 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ் ட் போட்டியில் இடம் பெற்ற இந்திய அணியில் இருந்து காம்பீர், அவன்னா மற்றும் சாவ்லா ஆகிய 3 வீரர்கள் நீக்க ப்பட்டனர். 

மேற்படி 3 வீரர்களுக்குப் பதிலாக ஷிகார் தவான், புவனேஷ் குமார் மற் றும் மூத்த சுழற் பந்து வீரரான ஹர்பஜ ன் சிங் ஆகிய 3 வீரர்கள் அணியில் சேர் க்கப்பட்டனர். 

டெல்லி வீரரான ஷிகார் தவான் ஏற்க னவே இந்திய ஏ அணியிலும், தேசிய அணியிலும் இடம் பெற்றார். மே. இ.தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் ஆடினார். 

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவர் ஆடிய போதிலும், நன்கு ரன் எடுக்காத தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரஞ்சி மற்றும் இராணி கோப் பை போட்டியில் நன்கு ஆடியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். 

கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தவான் இதுவரை 5 ஒரு நாள் போட்டியில் பங் கு கொண்டு 69 ரன்னை எடுத்து இருக்கிறார். 

மே.இ.தீவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அதிகபட்சமாக 50 ரன் எடுத்தார். அவர் தொடர்ந்து நிலைத்து ஆடி ரன் எடுக்க தவறியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இதுவரை 81 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளன தவான் மொத்தம் 5,679 ரன்னைக் குவித்து இருக்கிறார். இந்த சீசனில் மட்டும் 833 ரன் எடுத்து இருக்கிறார். தவிர,4 சதங்களையும் அடித்து இருக்கிறார். 

இந்த சீசனில் தவான் முதல் தர கிரிக்கெ ட் போட்டிகளில் நிலைத்து ஆடி ரன் னை எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடி த்தார். இதனைத் தொடர்ந்து அவர் அணிக்கு தேர்வானார். 

இது குறித்து தவானிடம் கேட்ட போ து, மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தத் தொடரில் நான் சரியாக ஆடாததால் அணியில் தொடர முடியவில்லை. தற்போது முதல் தர போட்டிகள் எனக்கு நல்ல அனுபவ த்தை அளித்துள்ளது. எதனையும் எதிர் பார்க்காமல் நான் நன்கு ஆடி ரன்னை எடுத்தேன். இங்கி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், சதம் (110) அடித்தேன். டெர்ன் பேச், பின், மீக்கர் மற்றும் டிரட்வெல் ஆகிய பெளலர்களை சிரமம் இன் றி சந்தித்தேன். இந்த சதம் எனக்கு நல்ல நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடந்த முறை போல இதனை வீணடிக்க மாட்டேன். நன்கு பயன்படு த்தி எனது இடத்தை தக்க வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்