அவதூறு வழக்கில் கருணாநிதி ஆஜராக உத்தரவு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில்  கருணாநிதி ஏப்ரல் 29​ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி முரசொலியில் அவதூறு செய்தி வெளியிட்டதாக சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று நீதிபதி பொன்.கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முரசொலி ஆசிரியர் செல்வம், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் ஏப்ரல் 29-ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: