முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் பிறந்தநாள் இன்று 65 ஜோடிகளுக்குத் திருமணம்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, பிப்.14 - முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 65 ஜோடிகளின் திருமணத்தை ஙமுதல்வர் ஜெயலலிதா இன்று நடத்தி வைக்கிறார். இது குறித்த விபரம் வருமாறு:-

முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளையொட்டி 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த ஜெயலலிதா பேரவை டி.ஆர்.அன்பழகன் ஏற்பாடு செய்துள்ளார். இது தவிர அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், ஆவடி நகரச்செயலாளர் தீனதயாளன் ஆகியோரின் இல்லத்திருமணங்களையும் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.

ஒரே மேடையில் 65 ஜோடிகள் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். 65 ஜோடிகளுக்கு 65 வகையான  சீர்வரிசைகளுடன், 4 கிராம் தங்கத்தாலி, மெட்டி, மணமக்களுக்கு பட்டுபுடவை, பட்டு வேட்டி, சட்டையும் வழங்கப்படுகிறது. 

68 ஜோடி திருமணமும், நாளை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான மேடை, பந்தல் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்தநாளையொட்டி 64 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன் ஏற்பாடு செய்திருந்தார். 

இதேபோன்று இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு 65 வயது ஆவதையொட்டி 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க டி.ஆர்.அன்பழகன் ஏற்பாடு செய்துள்ளார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பா.மோகன், கே.வி.ராமலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன், வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டிக்கர் ரவி ஆகியோர் விழா மேடை பந்தலின் அலங்காரங்களை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள். அப்போது தர்மபுரி மாவட்ட ஒன்றியச்செயலாளர்கள் கோவிந்தசாமி, குமார், வேலுமணி, முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழை, எளிய குடும்பத்தில் இருந்து மணமக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா திருமணம் நடத்தி வைக்கிறார். முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்து திருமணம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை வழிநெடுகிலும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளை ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன் ஏற்பாடு செய்துள்ளார்.

சீர்வரிசை பொருட்கள்:-

1.சாமி படம், 2.முதல்வர் படம், 3.குத்துவிளக்கு, 4.காமாட்சி விளக்கு, 5.கற்பூர ஆரத்தி மஞ்சள், 6.குங்குமச் சிமிழ் குங்குமம், 7.உத்திரணி, 8.தூபக்கால், 9. பஞ்சபாத்திரம், 10.பித்தளை பிளேட், 11.மணி, 12.கிரைண்டர், 13. எல்.பி.ஜி ஸ்டவ், 14.டேபிள் பேன், 15. பிரஸ்சர் குக்கர், 16.அடுக்கு கேரியர், 17.மிக்ஸி, 18.சுவர் கடிகாரம், 19.வாட்ச் (2), 20.சில்வர் டிராம், 21.ஸ்டீல் குடம், 22.ஸ்டீல் சொம்பு, 23.ஸ்டீல் தவளை, 24.இட்லி அடுக்கு, 25.சாப்பாடு ப்ளேட் (2), 26.டபரா மற்றும் டம்பளர் (2), 27.வாட்டர் டம்ளர் (3), 28. சில்வர் பொங்கல்பானை, 29. வடிதட்டு, 30.கடாய், 31.மசாலா டப்பா, 32.குழம்பு பாத்திரம், 33.டிபன் பிளேட் (2), 34.வால்பாத்திரம்  35.டப்பா செட் (4), 36.ஸ்டீல் தூக்கு, 37.பவுடர் டப்பா, 38.சோப்பு டப்பா, 39.அன்னக்கரண்டி, 40.தோசைக்கல், தோசை கரண்டி, 41.குழிக்கரண்டி, 42.ஜல்லிக்கரண்டி, 43 பொறியல் கரண்டி, 44. ஸ்பூன் (6), 45.பெரியதாம்பூல தட்டு (2), 46.மெத்தை, 47.ஜமுக்காளம், 48.பெட்ஷீட், 49.தலையணை, 50 சூட்கேஸ் உட்பட 65 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்