முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வெடிப்பில் காயமடைந்த இளைஞரிடம் விசாரணை

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,பிப்.24 - ஐதராபாத் குண்டுவெடிப்பில் காயம் அடைந்த இளைஞனுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய போலீசார் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஸ்நிலையம் அருகே தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 16 பேர் பலியானார்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் அப்துல் வாசி மீர்ஜா என்ற இளைஞனும் அடங்கும். இந்த இளைஞன் ஏற்கனவே ஒரு குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தவன். கடந்த 2007-ம் ஆண்டு இதே ஐதராபாத்தில் மெக்கா மஜீத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் அப்துலும் ஒருவராவர். அவர் கடந்த 21-ம் தேதி அன்று மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். அவனிடம் ஐதராபாத் போலீசார் நேற்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். ஆனால் இந்த விசாரணையானது சந்தேகத்தின் பேரில் நடத்தப்படவில்லை. மற்றவர்களுடன் சாட்சியாக சேர்த்து அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தினோம் என்று ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்தின்பேரில் அப்துல் விசாரிக்கப்பட்டாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு அந்த மாதிரி ஒன்றும் இல்லை என்று சர்மா பதில் அளித்தார். ஆனால் ஐதராபாத் குண்டுவெடிப்பில் அப்துல் வாசி மீர்ஜாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில்தான் போலீசார் விசாரணை நடத்தினர் என்று பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. மீர்ஜாவை தவிர மேலும் பல இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்