முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் குண்டுவெடிப்பு: பிரதமர் - சோனியா ஆறுதல்!

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், பிப். 25 - ஐதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஐதராபாத்தில் கடந்த வியாழன்று தில்சுக் நகரில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 16 பேர் பலியாகினர். 119 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை பிரதமர் மன்மோகன்சிங் கண்டித்திருந்தார். இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ்ஈடுபட்டோரை தப்ப விட மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். 

மேலும் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவியையும் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி ஆகியோர் ஐதராபாத் வந்தடைந்தனர். இருவரும் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விவரங்களை ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இருவரிடமும் விவரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்