முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 மாணவ- மாணவியர் விடுதிகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 2 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 3 -  ரூ.12 கோடியே 95 லட்சத்தில் கட்டப்பட்ட 27 மாணவ- மாணவியர் விடுதிகளை

முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா 1.3.2013 அன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 12 கோடியே 95 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 27 மாணவ, மாணவியர் விடுதிகளை காணொலிக் காட்சி  மூலமாக  திறந்து வைத்தார்.  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், ஆலத்துர் மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் தலா 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகள்;  புனல்வாசலில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீர்மரபினர் பள்ளி மாணவர் விடுதி; திருவையாறில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் இசைக்கல்லுரி மாணவியர் விடுதி; கடலூர் மாவட்டம், நெய்வேலி தெற்கில் 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; 

விருதுநகர் மாவட்டம், வீரசோழனில்  48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; ராஜபாளையத்தில் 54 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; சாலைமறைக்குளம் மற்றும் கட்டனுரில் தலா 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகள்;  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டையில் 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி;  திண்டிவனத்தில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி;  வளவனூரில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; ஆலகிராமத்தில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி;  தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  43 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; பாளையம்புதுரில் 

51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; சோலைக்கொட்டாயில் 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி;  நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; திருமங்கலம்காளியில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; வேலுர் மாவட்டம், ரெண்டாடியில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி;  கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திப்பாடியில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; திருச்சி மாவட்டம், பைத்தம்பாறையில்  48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் 51 லட்சத்து  4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; பெரம்பலூர் மாவட்டம், காரையில்  51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; சிவகங்கை மாவட்டம், மாங்குடியில் 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி;  

என மொத்தம், 12 கோடியே 95 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 27 மாணவ, மாணவியர் விடுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 1.3.2013 அன்று  திறந்து வைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட இந்தப் புதிய மாணவ, மாணவியர் விடுதிகள் மூலம் 1350 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

மேற்குறிப்பிட்ட 27 விடுதிகளில் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி, பெரம்பலூர் மாவட்டம், காரை பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி கட்டடங்களுக்கு  சூரிய ஒளி மூலம் நீnullரை சூடுபடுத்தும் கருவி, மின்சார புகைபோக்கி, குளிர்சாதன பெட்டி, மேம்படுத்தப்பட்ட சமையல் கூடம்  போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.    

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி,  தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி மற்றும் சோலைக்கொட்டாய் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி கட்டடங்களுக்கு  மின்சார புகைபோக்கி, குளிர்சாதன பெட்டி, மேம்படுத்தப்பட்ட சமையல் கூடம் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில்,  சமூகநலத் துறை அமைச்சர்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்