முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை இலங்கை விடுதலை செய்ய முதல்வர் கடிதம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.5 -கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் இலங்கை அரசு உடனே விடுதலை செய்ய பிரதமர் வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் மீனவர்கள் 16 பேர் 3.3.2013 காலை நேரத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அந்த மீனவர்களும் அவர்களுடைய படகுகளும் கல்பிட்டியா காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

இலங்கை ராணுவம் அப்பாவி இந்திய மீனவர்களை கைது செய்வதும், துன்புறுத்துவதும் கடந்த சில மாதங்களாக தொடர் நிகழ்வுகளாகி வருவதும், அது மீனவ சமுதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற உணர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதையும் நான் வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கைது செய்யப்பட்டுள்ள 16 மீனவர்களின் குடும்பங்களும் பல்வேறு மீனவ சங்கங்களும் நீண்ட காலமாக அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்து வருகிறார்கள் என்றும் அவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்கள். மீன் பிடிக்கும் போது கைது செய்யப்படும் மீனவர்கள் நீண்ட கால சட்ட சிக்கல்கள் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அரசு எப்போதும் உறுதி அளித்துவந்துள்ளது. ஆகையினால் 16 மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் எதுவும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வற்புறுத்த வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்