முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனிமாவட்ட நீதிமன்றம் மற்றும் பெரியகுளம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு சோதனை

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

பெரியகுளம் மார்ச் - 9 - லெட்சுமிபுரத்தில் உள்ள தேனி மாவட்ட நீதிமன்றம் மற்றும் பெரியகுளம் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தொலைபேசி தகவலை அடுத்து பெரியகுளம் காவல் துறையினர்  வெடிகுண்டு சோதனை மோப்பநாய் வைகையுடன் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வெடிகுண்டு சோதனை கருவிகள் கொண்டு மாவட்ட நீதிமன்றம் மற்றும் பெரியகுளம் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை இதுபோன்று மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஆண்;;;;;;டிபட்டி நீதிமன்றங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியகுளம் காவல் துறையினர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்