முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் மகளிர் தின பேரணி

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

தேனி,மார்ச்.- 9 - மகளிர் தினத்தையொட்டி தேனியில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி தேனியில்,தேனி மாவட்ட பெண்கள் இயக்கம்,ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம்,எவிடென்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கை நடத்தியது.பேரணியை எஸ்.பி.பிரவீண்குமார் அபினவு துவக்கி வைத்தார்.பேரணி தேனி கனராவங்கி அருகில் இருந்து புறப்பட்டு மதுரை சாலை,நேரு சிலை ,பெரியகுளம் ரோடு,ரயில்வே கேட்,என்.ஆர்.டி. ரோடு வழியாக கருத்தரங்கம் நடந்த அரங்கத்தை அடைந்தது. அரங்கத்தில் நடந்த கருத்தரங்கிற்கு ஆண்டிபட்டி ஆரோக்கிய அகத்தின் இயக்குநர் சாபுசைமன் தலைமை வகித்தார்.மாவட்ட பெண்கள் இயக்க செயலாளர் சித்ரா வரவேற்றார்.இதன் தலைவி அருண்மொழி ஆண்டறிக்கை வாசித்தார்.பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சாரக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் ,எவிடென்ஸ் இயக்குனர் கதிர் பேசினர்.மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது : பெண்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக கல்வி,சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் முன்னிலை வகிக்கிறது.பெண்களை பொறுத்தவரை குறைந்தபட்சம் பிளஸ்-2 படிக்க வேண்டும்.இதற்கு காரணம் ,அரசு வழங்கும் நல உதவிகளை பெறுவதற்கு மட்டும் இல்லாமல் மன உறுதி வளர்க்கவும் உதவும்,இதைப்போல் ,சுகாதாரத்தை பேணிக்காப்பதில் பெண்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.சுகாதாரத்தை காப்பதன் மூலமாக உடல் உறுதியுடன் பெண்கள் திகழ முடியும்.மேலும்,பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் நிலைக்கு வர வேண்டும்.இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு வழங்கி வருகிறது.இன்றைக்கு படித்த பெண்கள் ரூ. 1 கோடி வரை ரூ.25 இலட்சம் மானியத்தில் கடன் பெற்று தொழில் துவங்க திட்டம் உள்ளது.இதனை பெண்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் .தனியாக சுயதொழில் செய்ய தயக்கம் உள்ளவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து சிறுதொழில் செய்து வருமானம் ஈட்டி சமுதாயத்தில் முன்னேற்றம் அடையலாம் என்றார்.Women's Day rally in Theni

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்