முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.பிரதமர் வருகைகுறித்து கருத்துகூற தலைமை தளபதி விக்ரம்சிங் மறுப்பு

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.- 10 - பாகிஸ்தான் பிரதமர் ராஜா பெர்வெஸ் ஆஷ்ரப் இந்தியாவுக்கு வருகை தருவது குறித்து கருத்துக்கூற ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் மறுத்துவிட்டார். இந்திய வீரர்கள் இரண்டு பேர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டனர். அதோடுமட்டுமல்லாது ஒரு வீரரின் தலையை கொய்துவிட்டனர். இதனால் இருநாட்டு இடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஆஷ்ரப் இந்தியாவுக்கு வந்து அஜ்மீர் தர்ஹாவில் தொழுகை நடத்துகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தர்ஹாவின் பூசாரி ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு வருவது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு கருத்து கூற அவர் மறுத்துவிட்டார். பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு வருவது அரசியல் ரீதியான முடிவாகும். இதை நாம் பிரச்சினையாக்க வேண்டாம். இதுகுறித்து அரசு முடிவு செய்யட்டும். ராணுவ தலைமை தளபதியாக இருப்பதால் இதுகுறித்து நான் எதுவும் கூறமுடியாது. கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர்களின் அத்துமீறல், இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றது மற்றும் ஒரு வீரரின் தலையை கொய்தது குறித்து மத்திய அரசிடம் எங்கள் கவலையை தெரிவித்துவிட்டோம் என்றும் விக்ரம் சிங் கூறினார். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். திருப்பிச்சுடுவோம். பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலுக்கு நாங்கள் சரியான பதிலடி கொடுத்து வருகிறோம். திபெத் அருகே உள்கட்டமைப்பு வசதிகளை சீனா பெருக்கி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம் சிங், நாமும் நமது எல்லைப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி வருகிறோம் என்று பதில் அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்