முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் வழியாக கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

நெல்லை,மார்ச்12 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் நேற்று கடல் வழியாக படகுகளில் வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலையத்தை மூடக் கோரி கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கூடங்குளம் முதல் அணு உலையில் நிரப்பப்பட்ட யுரேனியம் எரி பொருளை அகற்ற வேண்டும். அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலையை போராட்டக் குழுவினர் ஜப்பான் நாட்டில் புகுஷிமா அணு உலை நடந்த 2ம் ஆண்டு நினைவு நாளன்று கடல் மற்றும் தரை மார்க்கமாக முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதரி ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் போராட்டக்காரர்கள் தாங்கள் அறிவித்தப்படி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை 250க்கும் மேற்பட்ட படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் இடிந்தகரை, கூடங்குளம், பெருமணல், கூட்டப்புளி, உவரி, விஜயாபதி, கூத்தங்குழி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி கூடங்குளம் கடல்பகுதியில் தமிழக கடலோர காவல்படை போலீசார், ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரோந்து படகுகளில் சென்று கண்காணித்தனர். மேலும் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் கூடங்குளம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்