முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிப்பு: அ.தி.மு.க. வெளிநடப்பு

புதன்கிழமை, 13 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். 14 - ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.பாராளுமன்ற லோக்சபையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அ.தி.மு.க எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பித்துரை எழுந்து பேசுகையில், 2013 - 14 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் முடங்கிப் போயிருக்கின்றன என்று குற்றம் சாட்டினார். இதற்கு ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் பதிலளித்து பேசினார். இதில் திருப்தியடையாத அ.தி.மு.க உறுப்பினர்கள் தம்பித்துரை தலைமையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் மைத்ரேயன் பேசுகையில், கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு இத்தாலி சென்றுள்ள 2 இத்தாலிய மாலுமிகளை அந்த நாடு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் உள்ள இத்தாலி தூதரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்