முக்கிய செய்திகள்

உஸ்மானியா பல்கலையில் பதட்டம்- மாணவர்கள் போராட்டம்

Telegana

ஐதராபாத்,பிப்.22 - தனித்தெலுங்கானா மாநிலம் கோரி வரும் தெலுங்கானா மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று பதட்டம் நீடித்தது. போலீசார் மாணவர்களை தடுத்த போது ஆத்திரமடைந்த உஸ்மானியா மாணவர்கள் அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தினர். இதனால் பல்கலைக் கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்நிலையில் தனித்தெலுங்கானா ஆதரவாளர்கள் நேற்று ஒரு ரயில் நிலையத்தையும் தாக்கினார்கள். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: