முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் கோரிக்கைகள் பரிசீலிப்பு: சிதம்பரம்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். 20 - தி.மு.க. மத்திய அரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள போதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக தி.மு.க. வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் தி.மு.க விலகுவதாக நேற்று காலை கருணாநிதி அறிவித்தார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரது அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். லோக்சபாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. அதனால் தி.மு.க. வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் மத்திய அரசு கவிழாது, தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்