குஜராத் நரேந்திர மோடியால் முன்னேறவில்லை: திக்விஜய்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்ரல்.4 - குஜராத் மாநிலம் எற்கெனவே நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த மாநிலம்  எப்போதுமே வளர்ச்சியில் முன்னணியில்தான் உள்ளது. குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் அந்த மாநிலம் முன்னேறியுள்ளது என்று எவரும் கூற முடியாது. மோடியும் அவ்வாறு கூற முடியாது. கூறக் கூடாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 

  குஜராத் மாநில வளர்ச்சி பற்றிய பெருமையை அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி ஏற்க முடியாது. காரணம் எற்கெனவே அந்த மாநிலம் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. இனிமேல்தானா 

வளர்ச்சி அடையப்போகிறது.  குஜராத் மாநிலம் ஒரு இரவில் வளர்ச்சி அடையவில்லை. அது படிப்படியாக முன்னேறிதான் வந்துள்ளது. எனவே எனது ஆட்சியில் தான் குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று எந்தத் தருணத்திலும்  நரேந்திர மோடி கூற முடியாது. மாநிலங்களைப் பொறுத்த வரையில் எப்போதும் குஜராத் மாநிலம் வளர்ச்சியில் முன்னணியிலேயே உள்ளது. 

 ஏற்கெனவே வளர்ச்சி அடைந்த மாநிலத்தை நான்தான் முன்னேற்றினேன் என்று அவர் எப்படி கூற முடியும் என்று அவர் கேட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவது பற்றி கேட்டபோது அவர் பதிலளிக்கையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் ராகுல் காந்தி தான் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றார். 

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ள புதிய அணியில் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றவாளியாக உள்ளவர், இவர் அந்த புதிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

    நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி போட்டியிடுவது அநேகமாக உறுதியாகிவிட்டது. இந்தியா முழுவதும் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் பதவிக்கு மோடி போட்டியிடுவது உறுதி ஆகிவிட்டது. 

ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டி யிடுபவர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தபோகிறேன் என்று ராகுல்காந்தி சமீபத்தில் பேசியிருந்தார். எனவே மன்மோகன்சிங் தான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்ற தோற்றம் நிலவியது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலுள்ள முக்கிய தலைவர்கள் ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று கூற வேண்'டிய நிர்ப்பதம்  அந்தக் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: