முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேபிசி முன் ஆஜராக பிரதமர் தயங்குவது ஏன்? பாஜக

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்ரல் 4 - 2ஙீஜி அலைக்கற்றை விவகாரத்தை விசாரிக்கும்  நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) முன்பாக ஆஜராக பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்  இருவரும் தயக்கம் காட்டுவது  குறித்து  காங்கிரஸ் கட்சி விளக்கம்  அளிக்க வேண்டும்ா என்று பாஜக செய்தித் தொடர்பாளர்  நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.  இது தொடர்பாக,  டெல்லியில் செய்தியாளர்களிடம்  செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

 2ஜி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  ஆ.ராசா, நாடாளுமன்ற  கூட்டுக் குழு முன்பு ஆஜராகி  சாட்சியம்  அளிக்க  விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ நிராகரித்து வருகிறார். ராசாவை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என சாக்கோவை பாஜக  மூத்த

உறுப்பினர்  யஷ்வந்த் சின்ஹா கேட்டுக்  கொண்டார். அதையும்  சாக்கோ நிராகரித்தார். சிதம்பரம், மன்மோகன்சிங் இருவரையும்  விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று, கூட்டுக் குழுவில்  உள்ள உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளதையும் சாக்கோ நிராகரித்து வருகிறார். இது குறித்து அதிருப்தியடைந்து,  மன்மோகன் சிங்குக்கு நேரடியாக  சின்ஹா கடிதம் எழுதினார்.  அதை எதிர்த்து  சாக்கோ கருத்து வெளியிடுகிறார்.  நாடாளுமன்றத்தின் அங்கமாக விளங்கும் கூட்டுக் குழுவின் தலைவராக உள்ள சாக்கோ, காங்கிரஸ் பிரமுகர் போல 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை அணுகுகிறார் என்று நிர்மலா  சீதாராமன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago