முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை ரிசர்வ் வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஏப்ரல் 4 - மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் கைது  செய்யப்பட்டார்.  செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 27 வயது  மதிக்கத்தக்க அந்த இளைஞரின் பெயர் பத்ம கிரிராவ் சேகர் என்பதும்,  அவர் கேரள  மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் என்பதும்  விசாரணையில்  தெரியவந்துள்ளது. அந்த இளைஞர்  கையிலிருந்த  ஏர்கன் மூலம் சுட்டதில்  எவருக்கும்  காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு  வீரர்கள்  அந்த நபரை  மடக்கி  கைது செய்ததாக  ரிசர்வ்

வங்கி   வெளியிட்ட  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில்  சிறை வைக்கப்பட்டுள்ள  சேகரிடம் மகாராஷ்டிர தீவிரவாத  தடுப்புப் பிரிவு போலீசார்   விசாரணை நடத்தி வருகின்றனர்.  எந்த நோக்கத்துக்காக  அவர் ரிசர்வ் வங்கியில்  நுழைய முயன்றார்,  இதன் பின்னணியில்  

ஏதாவது  தீவிரவாத  அமைப்புகள்  உள்ளனவா என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து  வருகின்றனர்.  கேரள மாநிலத்தில்  அவர் மீது ஏதேனும்  வழக்குகள்  உள்ளனவா என்பதைப் பற்றியும்  விசாரிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி  காவல் பொறுப்பாளர் டி.சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago