முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் வெற்றிபெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.6 - கடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெற்றிபெற்றதை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி ஜெயந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தருணத்தில் நான் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தேன். ஆனால் என்னுடைய வேட்பு மனுவில் குறைபாடு உள்ளதாக தெரிவித்து தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுவை தள்ளிவிட்டனர். அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் தரும்படி கோரினேன். அவகாசம் தரவில்லை. ஆனால் நான் தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விட்டது. அதன் காரணமாக என்னுடைய வெற்றி வாய்ப்பு பறிபோய் உள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். விஜயகாந்த் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேர்தல் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் - ஜெயந்தி வேட்பு மனுவை முன் மொழிந்தவர்களின் 3 பேர் கை ரேகையை தேர்தல் வேட்பாளர் வேட்பு மனுவில் வைத்துள்ளார். அதற்காக சான்று ஒப்பம் பெறாமல் தாக்கல் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத்தான் தேர்தல் அதிகாரி மனுதாரரின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளார். தேர்தல் அதிகாரிகளின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆகையால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்