முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே கட்டிட விபத்து: மேலும் 5 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

தானே, ஏப்ரல்.8 - மராட்டிய மாநிலம், தானேயில் கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நகராட்சி துணை ஆணையர் உள்பட மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தானேயில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 72 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது 5 பேர் கைதானதையொட்டி கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

  தானே பகுதியில் புதிதாக 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இதில் 4 மாடிகளில் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர்.  மேலும் 3 மாடி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.அப்போது திடீரென  இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 72 பேர் உயிரிழந்தனர்.

 இந்த விபத்து தொடர்பாக நகராட்சி துணை ஆணையர் பாபாசாகேப் ஆண்டலே, போலீஸ்காரர் சவீத், தானே நகராட்சி குமாஸ்தா கிஸான் மேட்கே உள்ளிட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டு வந்தது. இது இடிந்து விழுந்தது தொடர்பாக ஏற்கெனவே  ஜமீல் குரேஸி, சலீம் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று தானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்