முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வெடி விபத்து: 70 பேர் பலி

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

டெக்காஸ், ஏப்.19 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் திங்கட்கிழமை நடந்த மராத்தான் போட்டியில் குண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் பதட்டமும், பரபரப் பும் ஓயும் முன்பே அமெரிக்காவில் மீண்டும் ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - 

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 70 பேர் இறந்தனர். 

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத் தில் வாகோ நகரின் புற நகரில் பெரிய உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த உர த் தொழிற்சாலையில் முக்கிய பகுதியி ல் தீ விபத்து ஏற்பட்டது .  

ரசாயன கலவைகள் வெடித்து சிதறின. இதையடுத்து தொழிற்சாலைக்குள் வெடி விபத்து ஏற்பட்டது. 

அடுத்த சில வினாடிகளில் மற்றொரு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உரத் தொழிற்சாலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதி தீப்பிடித்து ஏரிந்தது. 

வெடி விபத்து ஏற்பட்ட சத்தம் 45 மை ல் சுற்றளவிற்கு கேட்டது. இதனால் உரத் தொழிற்சாலையின் சுற்றுப் பகுதி முழுவதும் நில நடுக்கம் ஏற்பட்டது போல இடிந்து விழுந்தன. இந்த தொ ழிற்சாலை அருகே உள்ள பள்ளிக் கூட மும், நர்சிங் ஹோமும் இடிந்து தரை மட்டமாகின. 

இந்த இடிபாடுகளில் நூற்றுக் கணக்கா னோர் சிக்கிக் கொண்டனர். இது பற் றிய தகவல் கிடைத்ததும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் சென் று தீயை அணைத்தனர். 

இடிபாடுகளுக்கு இடையே சிக்சி காய ம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவம னைக்கு கொண்டு செல்ல 50 ஆம்புலன் ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. உரத் தொழிற்சாலை அருகில் அவசர கால மருத்துவமனை அமைக்கப்படும் . மிக ஆபத்தான நிலையில் உள்ளவர்க ளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல் ல 6 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப் பட்டன. வெடி விபத்துகளிலும், இடி பாடுகளிலும் சிக்கி 70 பேர் உயிரிழந்த னர். மீட்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்