முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி விவகாரத்தில் ஜேபிசி அறிக்கை ஒருதலைபட்சமானது - எதிர்கட்சிகள்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப் - 25 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை (துடஊ) ஒருதலைபட்சமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றியுள்ளன. இந்த அறிக்கையை வாக்கெடுப்பு நடத்தி தள்ளுபடி செய்ய பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இது ஒருதலை பட்சமானது என்று எதிர்க் கட்சிகள் கருதுகின்றன. பா.ஜ.க மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கையை நிராகரிக்க முடிவு செய்துள்ளன. குழுவின் அறிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். மேலும் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நிலைக் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான உண்மையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. ஜேபிசி அறிக்கையில் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சரின் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்