முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் சுயம்புவாய் உருவாகியிருக்கும் அரியவகை ஐந்துமுக ருத்திராட்சமரம்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்.ஏப். - 26 - திருமங்கலம் நகரில் உள்ள அருள்மிகு காட்டுப்பத்திரகாளி கோவிலின் பின்புறம் சுயம்புவாய் தோன்றி காய்த்துக்குலுங்கியிருக்கும் அரியவகை ஐந்துமுக ருத்திராட்சமரம் பக்தகோடி பெருமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வடமாநிலங்களில் குளிர்நிறைந்த பனிப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது ருத்திராட்சமரம்.இருப்பினும் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒருசில சிவஸ்தலங்களில் பன்முகங்களைக் கொண்ட ருத்திராட்ச மரங்கள் காய்த்துக்குலுங்கி வருகின்றன.ஆனால் வெப்பம் நிறைந்த தமிழ்நாட்டில் இந்தவகை மரங்கள் வளர்வது அபுர்ைவமாகும்.அதிலும் அதிக சக்திகொண்ட ஐந்துமுக ருத்திராடசமரம் வளர்வதும் காய்த்துக்குலுங்குவதும் அதிசய நிகழ்வாகும். இந்நிலையில் திருமங்கலம் நகரில் உள்ள அருள்மிகு காட்டுப்பத்திரகாளி கோவிலின் பின்புறம் சுயம்புவாய் அரியவகை ஐந்துமுக ருத்திராட்சமரம் ஒன்று உருவாகி தற்போது புத்ைதுக்குலுங்கி காய்காய்த்துள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண காட்டுச்செடி போல் தானாகவே இந்த மரம் உருவானது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் தண்ணீர் ஊற்றகூட யாருமின்றி வாரிச்சுருட்டும் வறட்சிக்கு மத்தியில் எந்தவகை மரமென்று வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.எனினும்12அடி உயரத்திற்கு வளர்ந்த இந்தமரம் புத்ைதுக்குலுங்கி காய்காய்த்த பின்புதான் அரியவகை ஐந்துமுக ருத்திராட்சமரம் என்பது வெளிஉலகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து சுயம்புவாய் உருவாகி ருத்திராட்சகாய்கள் காய்த்து குலுங்கியிருக்கும் இந்தமரத்தை தெய்வீகமரமென பாதுகாத்து தற்போது வணங்கிவருகின்றனர்.மேலும் சிறப்பு புஜைகளும் இந்தமரத்திற்கு செய்யப்பட்டு வருகிறது.பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த இவ்வகை மரம் தற்போது திருமங்கலம் காட்டுப்பத்திரகாளி கோவிலில் சுயம்புவாய் உருவாகி ஐந்துமுக ருத்திராட்ச காய்களை காய்த்திருப்பது அதிசயநிகழ்வாக கருதப்படுகிறது.இருப்பினும் சுயம்புவாய் உருவான இந்த மரத்தை இந்துசமயஅறநிலையத்துறை வேலியமைத்து முறையாக பாதுகாத்து பராமரித்திட வேண்டும் என்பதே பக்தகோடிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்