முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேகானந்தர் பாறையை சுற்றி நீந்தி நீச்சல் வீரர் சாதனை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஏப்.27 - கேரளா மாநிலம் சேர்த்தலா திருநல்லூரைச் சேர்ந்தவர் முரளிதரன் (38). நீச்சல் சாதானையாளரான இவர் டெல்லியில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். இவர் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தா பாறையை நீந்தி கடந்து சாதனை படைக்கப் போவதாகவே அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று பகல் 12.10 மணிக்கு அவரது சாதனை நிகழ்ச்சி கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்குழக படகுத் துறையில் நடந்தது.

கேரள சபாநாயகர் கார்த்திகேயன், கொடி அசைத்து இந்த சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பகல் 12.10 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய முரளிதரன் விவேகானந்தர் பாறையை சுற்றி வந்து 12.43 மணிக்கு விவேகானந்தா பாறையில் ஏறினார்.

2 கிலோ மீட்டர் தூரத்தை அவர் 33 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் விவேகானந்தா பாறைக்கு பின்புறம் நீந்தி சென்று கொண்டிருந்தபோது கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட சுழலில் சிக்கினார். ஆனாலும் திறமையாக நீந்தி அதிலிருந்து தப்பினார்.

அவர் கடலில் நீந்திய போது பாறைகளில் பட்டு காலில் காயமும் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நீந்தி முரளிதரன் சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி, அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் லின்சிராய், உதவி மேலாளர் ஜோசப் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீச்சல் வீரர் முரளிதரன் ஏற்கனவே கேரளாவில் 41 கி.மீ. தொலைவு உள்ள  வேம்பநாடு ஏரியை நீந்தி கடந்து சாதனை படைத்தார். மேலும் 2012- ம் ஆண்டு இலங்கையில் உள்ள தலைமன்னார் முதல் இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான 35 கி.மீ. தொலைவையும் நீந்தி கடந்துள்ளார். 

தனது நீச்சல் சாதனைகளுக்காக அவர் பல பரிசுகளை வென்று உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்