முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.கவினர் சட்ட மீறலில் ஈடுபட்டனர்: முதல்வர் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 -​ மாநாடு தொடர்பாக காவல் துறைக்கு அளித்த நிபந்தனைகளை பாமகவினர் காற்றில் பறக்கவிட்டுதுடன் சட்ட மீறல்களில் ஈடுபட்டனர் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் குற்றம் சாட்டினார் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்த சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதிலுரையில் தெரிவித்ததாவது:-இவ்விழா அமைப்பாளர்கள், விழா சம்பந்தமாக காவல் துறையினர் விதித்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதாக எழுத்து மூலமாகவும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் உத்தரவாதம் அளித்துவிட்டு, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. வழக்கம் போல பெரும்பாலான நிபந்தனைகளை மீறியதோடு, சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கீழ்கண்ட நிபந்தனைகள் விழா அமைப்பாளர்களால் மீறப்பட்டுள்ளன. 

விழாவில் பங்கேற்ற தலைவர்கள், விழாவை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர். 

இவ்விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குடி போதையில் இருந்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். 

விழாவிற்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர். 

மேலும், மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம், அம்மாள் நகர், பூஞ்சேரி, நந்தி மாநகர், காரணை மற்றும் சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடிக் கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர். 

விழாவிற்கு வந்தவர்கள் திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர். 

விழா முடிந்தவுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தரவில்லை. 

புராதன சின்னமான கடற்கரை கோவில் மேல் ஏறி அதில் அவர்கள் கட்சி கொடியை கட்டி புராதன சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டனர். 

இது சம்பந்தமாக தொல்லியல் கண்காணிப்பாளர் இடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், “கஹகூகீஙூ ச்க் ஙீடீச்ஙீங்டீ கீஹசுடீ ஙூசூஹஙுஙிடீக்ஷ டுடூஙூடுக்ஷடீ சிகீடீ ஙிச்டூசீஙிடீடூசி க்ஷஹஙிஹகிடுடூகி சிகீடீ க்டீடூஷடுடூகி, ங்ஹசூடூ, கிஹஙுக்ஷடீடூ ஹடூக்ஷ ஷங்டுஙிஸடீக்ஷ சிகீடீ கீடுஙூசிச்ஙுடுஷஹங் ஙூகீச்ஙுடீ சிடீஙிஙீங்டீ ஹடூக்ஷ கீச்டுஙூசிடீக்ஷ க்ங்ஹகிஙூ ஹடூக்ஷ ஹஙுடீ ஙூடுசிசிடுடூகி ச்டூ சிகீடீ ஙிச்டூசீஙிடீடூசி ஹஙூ ஙீடீஙு சிகீடீ ஙுடீஙீச்ஙுசிஙூ ஙுடீஷடீடுசுடீக்ஷ க்ஙுச்ஙி ச்சீஙு ச்க்க்டுஷடுஹங்ஙூ ஹசி 6 ஙீ.ஙி. சிச்க்ஷஹநீ.  பகீடீநீ கீஹசுடீ ஸடீடீடூ ஙூசீஸகுடீஷசிடீக்ஷ சிச் சுடுஙுசிசீஹங் கீஹஙுஹஙூஙூஙிடீடூசி ஸநீ சிகீடீ ங்ச்ஷஹங் கிஙுச்சீஙீஙூ ஹடூக்ஷ ஙீசீஸங்டுஷ ஹடூக்ஷ கீஹசுடீ கிஹடுடூடீக்ஷ க்ச்ஙுஷடீக்சீங் டீடூசிஙுநீ டுடூசிச் சிகீடீ ஙிச்டூசீஙிடீடூசிஙூ” என்றும், மேலும்,  “பகீடீ ஙிச்டூசீஙிடீடூசி கீஹஙூ ஸடீடீடூ டீஞ்ஙீச்ஙூடீக்ஷ சிச் சுஹடூக்ஷஹங்டுஙூஙி ஹடூக்ஷ க்ஷடீஙூசிஙுசீஷசிடுச்டூ” 

 லட்சக்கணக்கானோர் வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை கோயிலுக்குள் புகுந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலி, தோட்டம் மற்றும் புராதன சின்னங்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் உள்ளுார் குழுவினர் மற்றும் பொதுமக்களின் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு புராதன இடங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து இருக்கிறார்கள். அங்கு கலாட்டா செய்து நினைவுச்சின்னங்களை அழித்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசும் போது, ” 11ஙூ   மணிக்குப் பேசறேன் - போடு வழக்கு. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது ” என்று கூறியுள்ளார். 

பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ்  மீது 'வழக்குப் போடுங்கள்' என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பதிலுரையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்