முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசை எப்ப கலைப்பீங்க: மோடி கிண்டல்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

மங்களூர், மே. 4 - மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிற காஙகிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், காந்தியடிகள் சொன்னதைப் போல எப்போது காங்கிரஸ் கட்சியை கலைக்கப் போகிறார் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி கிண்டலடித்திருக்கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, பிறக்கும் போதே கோல்டன் ஸ்பூனுடன் பிறந்தவர் ராகுல். மிஸ்டர் கோல்டன் ஸ்பூன் சொல்கிறார், தாம் காந்தியின் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக.. அப்படிச் சொல்கிற மிஸ்டர் கோல்டன் ஸ்பூனுக்கு, காங்கிரஸ் கட்சியை காந்தி கலைக்கச் சொன்னது பற்றி தெரியுமா? காந்தி சொன்னது போல எப்போது காங்கிரஸை கலைக்கப் போகிறீர்கள்? சீக்கிரம் நிறைவேற்றுங்கள்.

சரப்ஜித் சிங் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சரப்ஜித் சிங் பிரச்சனையை உலக நாடுகளிடையே கொண்டு செல்வதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது. மத்திய அரசு அதைச் செய்யவில்லை.. நமது நாட்டின் பிரதமர் அவர்களே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகில் நமக்காக பேச ஒருநாடு கூட இல்லையே. சின்னஞ்சிறிய மாலத்தீவு நாடு நம்மை உதாசீனப்படுத்துகிறது. நாம் சொல்வதை வங்கதேசம்கூட கேட்பதில்லை. இத்தாலிய மாலுமிகளை நமது நாட்டுக்கு திரும்பக் கொண்டு வர நாட்டின் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டியிருக்கிறதே, இதனால் காங்கிரஸின் ஆதிக்கத்தில் இருந்து கர்நாடகாவையும் இந்தியாவையும் விடுவிக்க வேண்டும் என்றார் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்