முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் நினைவு பேரணி: தீவிரவாதிகள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 4 - அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் 2 ம் ஆண்டுநினைவு நாளையொட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற பிரம்மாண பேரணியில் ஏராளமான தீவிரவாதிகள் கலந்து கொண்டனர். ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ம் ஆண்டு மே 1 ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பின்லேடனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. நேற்று முன் தினம் 2 வது நினைவு தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடைபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு நகரமான குவெட்டாவில் பேரணி நடத்தப்பட்டது. இதில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்பான ஜமியாத் உலமா இ-இஸ்லாம் என்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்