முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

அலகாபாத், மே.13 - உத்தரபிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமி ராணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அத்துடன் அவள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டாள். ஆண்டவனுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்பும் டாக்டர்கள் கூட அவளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 

ராணியின் சோகக் கதை மே மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கியது. அவளுக்கு உதவ எவரும் முன் வரவில்லை. அவள் நிர்க்கதியாய் நிற்கிறாள். அழுது புலம்புவதைத் தவிர வேறு அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவளுக்கு உதவ வருபவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். இவளுக்கு இந்த நிலை ஏன் வந்தது. வறுமை. உலகில் இளமையில் வறுமை என்பது கொடுமையானதாகும். இது சிலருக்கு சாதகமாகப்போய்விட்டது. அதுதான் விதியோ என்பது மட்டும் புலப்படவில்லை.

 ராணியின் பெற்றோர் வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலை செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு முன்னா என்ற பண்ணையார் வேலைவாய்ப்பு கொடுத்தார். இதுவே இவர்களது மகளுக்கு எமனாகிவிட்டது. பண்ணையில் தாயும் தந்தையும் கூலி வேலை செய்து வந்தனர். இதை அறிந்த ஜமீன்தார் முன்னா தனது கிட்கனி வீட்டில் ராணியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சமுதாய துரோகி இத்துடன் மட்டும் நிற்கவில்லை. இவளது தங்கையின் மார்பையும் இந்த காமுகன் கடித்து குதறியுள்ளான். இது நடந்தபோது இவர்களது பெற்றோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

இதன்பிறகு போலீஸார்  விசாரணை நடத்தி முன்னாவை சிறையில் அடைத்தனர். ஆனால் ராணியின் கதி என்ன... அவள் உயிருக்குப் போராடுகிறாள். இவளை முதலில் டுபரின் பெண்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் விதி விளையாடியது. அந்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்று கூறி அங்கு ராணிக்கு சிகிச்சை அளிக்கமறுத்து விட்டனர்.

இங்கு தரமான சிகிச்சை அளிக்க வசதி இல்லை. எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளியுங்கள் என்று கூறிவிட்டனர். இதையடுத்து ராணியை அவளது பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. அவளது பெற்றோர் அங்குமிங்கும் ஓடினர். அழுது புலம்பினர். இதற்கிடையே இந்த பிரச்சனையை பரிவர்தன் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டது. டாக்டர்கள் ராணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது பற்றி தலைமை டாக்டரை முற்றுகையிட்டு அவரிடம் இதுபற்றி தெரிவித்தனர். 

இதுபற்றி மோனு குப்தா என்பவர் கூறியதாவது:

சிகிச்சையளிக்க இங்கு வசதி இல்லை என்றால் அந்த வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சிறுமியை வேறு தனியார் மருத்துவமனையில் சேர்க்க இவளது பெற்றோருக்கு பண வசதி இல்லை என்றார். ராணிக்கு தேவையான அனைத்த வசதிகளும் செய்யப்படும் என்று மருத்துவமனை டாக்டர் பத்மேகர் சிங் கூறினார். இதை அடுத்து ராணி அதே மருக்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்