முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்தை காரில் ஏற்றிச்சென்ற நிதீஷ்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா,மே.13 - பாட்னாவுக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தன்னுடைய காரில் ஏற்றிச்சென்று நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இறக்கிவிட்டார். மேலும் விமான நிலையத்திற்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

ப.சிதம்பரத்திற்கு நிதீஷ் குமார் தந்த இந்த மரியாதை நிமித்தமானது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாது இதர அரசியல் கட்சி தலைவர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதோடு பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கலாம் என்ற கருத்தும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. 

பீகார் மாநிலம் பின்தங்கிவிட்டது என்றும் அந்த மாநிலத்தை முன்னேற்றம் செய்வதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் கட்சிக்கு வரும் லோக்சபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான நிதீஷ்குமார் அறிவித்தார். அதனால் ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகலாம் என்று பேச்சு அடிபடுகிறது. 

இந்தநிலையில் பாட்னாவில் நாலந்தா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதீஷ்குமாரும் கலந்துகொண்டதாக தெரிகிறது. அதோடுமட்டுமல்லாது ப.சிதம்பரத்தை நிதீஷ்குமார் தன் காரில் ஏற்றிக்கொண்டு பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இறக்கிவிட்டார். அதோடுமட்டுமல்லாது காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியில் ப.சிதம்பரம் பேசினார். சிதம்பரம் பேசி முடிக்கும் வரை அங்கேயே நிதீஷ்குமார் இருந்தார். அதோடுமட்டுமல்லாது பாட்னா விமான நிலையத்திற்கும் சென்று ப.சிதம்பரத்தை வழியனுப்பி வைத்தார். இந்த அபரீதமான மரியாதையை ப.சிதம்பரத்திற்கு நதீஷ்குமார் காட்டியிருப்பது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது இதர கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள். ஆனால் நிதீஷ்குமாரின் வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கையில் எதுவும் இல்லை. இது வெறும் மரியாதை நிமித்தம்தான் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய சிதம்பரம் பீகார் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் விதிமுறைகளை மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார். இதை நிதீஷ்குமார் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்