பெனாசரின் தம்பி மனைவியை தோற்கடித்த சர்தாரியின் தங்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      உலகம்
Image Unavailable

 

கராச்சி, மே. 13 - மறைந்த பெனாசிர் பூட்டோவின் தம்பி முர்டசாவின் மனைவி ஜின்வா பூட்டோவை எதிர்த்துப் போட்டியிட்ட, பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியின் தங்கை பர்யால் தல்பூர் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 

பர்யால் தல்பூர், ஜனாதிபதி சர்தாரியின் இளைய தங்கை ஆவார். இவர் லர்கானா எம்.பி. தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெனாசிரின் தம்பி முர்டசாவின் 2 வது மனைவியான ஜின்வா பூட்டோ போட்டியிட்டார். கடுமையாக இருந்த இந்தப் போட்டியில் சர்தாரியின் தங்கை வென்று விட்டார். மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் சர்தாரியின் தங்கை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: