சீனாவில் சுரங்க வெடி விபத்து: 40 பேர் சாவு

திங்கட்கிழமை, 13 மே 2013      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், மே.14  - சீனாவில்  இரு வேறு  இடங்களில் நிகழ்ந்த  சுரங்க வெடி விபத்துகளில்  40 பேர் உயிரிழந்தனர்.  சீனாவின்  தென்மேற்கில்  உள்ள  சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை  நிகழ்ந்த வெடி விபத்தில்  28 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  16 பேர் காயமடைந்தனர்.  விபத்தைத் தொடர்ந்து  சுரங்கத்துக்குள்  சிக்கியிருந்த 81 பேர்  பத்திரமாக  மீட்கப்பட்டதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.  அதேபோல்,  குய்ஸாவ் மாகாணத்தில்  உள்ள சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை  நிகழ்ந்த  எரிவாயு  வெடி விபத்தில்  12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: