முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைஜனாதிபதி அன்சாரி உஜ்பெகிஸ்தானுக்கு பயணம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.22 - இந்திய துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி நேற்று 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக உஜ்பெகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் உயர்மட்ட குழுவும் செல்கிறது. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் உஜ்பெகிஸ்தானும் ஒன்றாகும். தாது வளம் நிறைந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் வகையில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அந்த நாட்டிற்கு 4 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று டெல்லியில் இருந்து உஜ்பெகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். உஜ்பெகிஸ்தான் தலைநகர் டாஸ்கண்ட் விமான நிலையத்தில் ஹமீத் அன்சாரிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார். உஜ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் ஹரிமோவை அன்சாரி சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவு, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முக்கிய ட்ோர்த்தை நடைபெறும் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அடுத்தாண்டு வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதனால் அந்தநாட்டில் மறுசீரமைப்பு பணிகளை இந்தியா மேற்கொள்வது குறித்தும் அதிபர் இஸ்லாமுடன் அன்சாரி விரிவான முறையில் விவாதிப்பார் என்று தெரிகிறது. உஜ்பெகிஸ்தானும் தீவிரவாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பல தீவிரவாத அமைப்புகள் அந்த நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதனால் தீவிரவாதத்தை ஒழிக்க கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இருநாடுகளிடையே தற்போது 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்து வருகிறது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அமீத் அன்சாரியுடன் மத்திய சுற்றுப்புறச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், எம்.பி.க்கள் கே.என்.பாலகோபால், சிவானந்த் திவாரி, சுமித்ரா மகாஜன், இ.எம்.எஸ். நாச்சியப்பன் ஆகியோர் கொண்ட உயர்மட்டக்குழுவும் சென்றுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு பிரதமராக இருந்த நரசிம்மராவும் கடந்த 2006-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும் உஜ்பெகிஸ்தான் சென்றனர். தற்போது ஹமீத் அன்சாரி சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்