முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைலட்டுகள் மீது எஸ்மா பாய்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.- 1  - கோர்ட்டு உத்தரவை மீறி நேற்று 4-வது நாளாக பைலட்டுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏர்இந்தியா 90 சதவீதம் விமானங்களை ரத்து செய்துவிட்டது. பைலட்டுகள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏர்இந்தியா முடிவு செய்தது. ஏர்இந்தியா நிறுவன பைலட்டுகளின் ஒரு பிரிவினர் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கேட்டு கடந்த செவ்வாய்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இந்தியன் கமர்சியல் சங்கத்தைச் சேர்ந்த 800 விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏர் இந்தியா விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வரும் இந்த போராட்டத்தால் ஏர்இந்திய விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. தற்போது வெறும் 36 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக வரும் மே 3-ம் தேதி வரை ஏர்இந்தியா டிக்கெட் பதிவை நிறுத்தியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.26.5 கோடி தினமும் நஷ்டம் ஏற்படுகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி ஏர்இந்திய விமான நிறுவன தலைவர் அரவிந்த் ஜாதவுடன் பேசினார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் வேலைக்கு திரும்பவேண்டும் என டெல்லி ஐகோர்ட் புதன் கிழமை உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை மீறி விமானிகள் போரட்டம் நடத்துகிறார்கள். இதனால் அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை தொடங்கும் எனவும் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
இதையடுத்து பைலட்டுகள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர்இந்திய நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பைலட்டு சங்க பொதுச் செயலாளர் ரிஷாப்கபூர் கூறுகையில் நாங்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். எஸ்மா சட்டம் எங்களை என்ன செய்யும் அதையும் பார்த்துவிடுவோம் என்று ஆவேசமாக கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்