முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.27  - சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நமது ஜனநாயக முறையில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை.   

 எனவே ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரிகள் இதைத் தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மக்களுக்கு எப்போதும் தகுந்த பாதுகாப்பு வழங்குவதை ஆட்சியில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இதில் காயமடைந்கவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி விடுத்துள்ள அறிக்கையில், நாகரிகமான இந்த சமுதாயத்தில், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமில்லை. தீவிரவாதம், வன்முறை ஆகியவை 

களையப்பட வேண்டும் என்றும் அன்சாரி கூறியுள்ளார். சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்