முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி ஆட்டம்: இந்தியா இலங்கையை தோற்கடித்தது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிர்மிங்ஹாம், ஜூன். 3 - இங்கிலாந்தில் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக் கான பயிற்சிஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில், விராட்கோக்லி மற்றும் திணேஷ் கார்த்திக் இருவரும் சதம் அடித்து அணியை வெற்றிப் பா தைக்கு அழைத்துச் சென்றனர். அவர்க ளுக்கு பக்கபலமாக, விஜய், ரெ ய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் ஆடினர். 

இந்தப் போட்டியில் பந்து வீச்சு எடுபட வில்லை. இரு அணிகளும் ரன் மழை யை பொழிந்தன. இந்திய அணி சார்பி ல், இஷாந்த்சர்மா, அமித் மிஸ்ரா மற் றும் புவனேஷ்வர் குமார் ஆகியோ ர் நன்றாக பந்து வீசினர். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. 

இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத் தில் இலங்கை அணியுடன் நேற்று மோதியது. இந்த ஆட்டம் பிர்மிங்ஹா ம் நகரில் உள்ள எட்பாக்ஸ்டன் மைதா  னத்தில் நடைபெற்றது. 

இதில் முதலில் களம் இறங்கிய இலங் கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்னை எடு த்தது. 

இலங்கை அணி தரப்பில், துவக்க ஜோ டி சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தது. இத னை பின்பு வந்த வீரர்களும் நன்கு பய ன்படுத்தியதால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது. 

தில்ஷான் அதிகபட்சமாக, 78 பந்தில் 84 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். ஜே. பெரீரா 94 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம்.

தவிர, ஜெயவர்த்தனே 30 ரன்னையும், சங்ககக்கரா 45 ரன்னையும், சண்டிமால் 46 ரன்னையும், சி. பெரீரா 26 ரன்னையு ம், எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், இஷாந்த் சர்மா 41 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத் தார். தவிர, புவனேஷ்வர் குமார் மற்று ம் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக் கெட் எடுத்தனர். 

இந்திய அணி 334 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சவாலான இல க்கை இலங்கை அணி வைத்தது. 

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 49 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்னை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில், விராட்கோக்லி 120 பந்தில் 144 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். திணேஷ் கார்த்திக் 81 பந்தில் 106 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ரெய்னா 34 ரன்னையும், விஜய் மற்றும் தோனி இருவரும் தலா 18 ரன்னையும் எடுத் தனர். 

இலங்கை அணி சார்பில், எரங்கா 60 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத் தார். தவிர, சி. பெரீரா மற்றும் சேன

னாயகே இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்