முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அப்துல் கலாம் புத்தக வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூன். 3 - அமெரிக்காவில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் அப்துல் கலாம் நேரில் கலந்து கொண்டார். மேரிலாண்ட் மாகாண துணைச் செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் சிறப்புரையாற்றினார். முன்னதாக மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மலே, டாக்டர் கலாமுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் மேடையில் தெரிவித்தார். இந்திய அமெரிக்கர்களின் குரல் வர்ஜீனியாவிலுள்ள தலைநகர இந்திய அமெரிக்கர்கள்ா சார்பில் டாக்டர் கலாம் எழுதிய புத்தகத்தின் பிரத்தியேக வெளியீடு நடைபெற்றது. விழாவில் டாக்டர் கலாமுடன் கலந்து கொண்ட டாக்டர் ராஜன் நடராஜன் இந்திய அமெரிக்கர்களின் குரல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அறிவியல் திறன், அழுத்தமான நம்பிக்கை மற்றும் நேர்மறையான எண்ணம் ஆகியவற்றுடன், இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் டாக்டர் கலாம் என்று புகழாரம் சூட்டினார். டாக்டர் கலாம் எடுத்துக்கொண்ட முயற்சியில் முழுமையாக தன்னை ்ஈடுபடுத்திக்கொள்பவர், கடின உழைப்பாளி, தொலை நோக்கு சிந்தனை கொண்டவர். ஒன் ட்ரீம் மில்லியன் ஸ்மைல்ஸ் என்ற டாக்டர் கலாமின் கனவுத் திட்டம், 21 ம் நூற்றாண்டில் இந்தியாவை எந்த வித நெருக்கடிகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட மிக வலுவான தேசமாக மாற்றும். மகாத்மா காந்திக்கு பிறகு, இந்தியாவில் அதிகமாக நேசிக்கப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம் என்பதில் பெருமை அடைகிறேன். பல்வேறு சாதனைகள் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளைஞர்களை காந்தம் போல் கவர்ந்து, 21 ம் நூற்றாண்டை எதிர்கொள்ளும் சிறந்த சிந்தனைவாதிகளாக மாற்றி வரும் டாக்டர் அப்துல் கலாமின் பங்களிப்பை கண்டு இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் மிகவும் பெருமை அடைந்துள்ளார்கள். இந்தியாவின் ரகசிய பாதை டாக்டர் கலாமின் 2020 புத்தகம் சாதாரண்மானதல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் ரகசிய பாதை போன்றது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா எவ்வாறு முழுமையான வளர்ச்சி பெற்ற நாடாக மாறும் எனபதற்கான சூட்சமம் இதில் புள்ளது. டாக்டர் கலாம் எப்போதும் முதலில் அடுத்தவர் சொல்லும் கருத்துக்களை நன்றாகக் கவனிப்பார், அடுத்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார், தொடர்ந்து அவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்திச் செல்வார். இந்தியாவின் இரட்டை வளர்ச்சி எரிசக்தி மற்றும் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிபடையும். தனியார் அரசு கூட்டு பங்கேற்பு திட்டத்தின் மூலம் பல நெருக்கடியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். டாக்டர் கலாமின் தொடர் பணிகள் மூலம் இந்தியா இந்த வளர்ச்சியை 2020 ம் ஆண்டில் எட்டும். டாக்டர் கலாம் அடிக்கடி அமெரிக்காவிற்கு வருகை தருவதன் மூலம் உலகின் பழமையான ஜனநாயக நாட்டிற்கும், மிகப் பெரிய ஜனநாயக நாட்டிற்குமிடையேயான அரசு, வர்த்தக உறவுகள் வலுப்படும். வாய்ப்புகளின் தேசமாக விளங்கும் அமெரிக்காவும், திறமைகளின் தேசமாக விளங்கும் இந்தியாவும் இணைந்து செயல்படும் போது இரண்டு நாடுகளும் வளம் பெறும் என்றார் ராஜன்.   கவர்னர் மார்ட்டின் ஓ மலே, 2011 ம் ஆண்டு மே மாதம் டாக்டர் ராஜன் நடராஜனை அம்மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்தார். தெற்காசியவை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க குடிமக்களில், இத்தகைய உயர் பதவியை அமெரிக்காவில் வகித்து வருபவர் ராஜன் மட்டுமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்