முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: நியூசிலாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

செளத்தாம்டன், ஜூன். 4 - இங்கிலாந்து அணிக்கு எதிராக செளத் தாம்டன் நகரில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலையை பெ ற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் துவக்க வீரர் குப்டில் அபார மாக பேட்டிங் செய்து சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக, வில்லியம்ச ன், டெய்லர் மற்றும் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, மெரக்லி னாகன், வில்லியம்சன், மில்ஸ், பிரேஸ் வெல், எல்.மெக்குல்லம் மற்றும் எலிய ட் ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப் பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித்தந்தது. 

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி செளத்தாம்டன் நக ரில் உள்ள ரோஸ்பெளல் மைதானத்தி ல் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. 

நியூசிலாந்து அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழப் பிற்கு 359 ரன்னைக் குவித்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில் துவக்க வீர ர் குப்டில் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டார்.  குப்டில் 155 பந்தில் 189 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

தவிர, வில்லியம்சன் 63 பந்தில் 55 ரன் னையும், டெய்லர் 54 பந்தில் 60 ரன்னையும், கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் 19 பந்தில் 44 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், முன்னணிவேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 65 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, ஸ்வான் 1 விக்கெட் எடுத் தார். 

இங்கிலாந்து அணி 360 ரன்னைஎடுத் தால் வெற்றி பெறளாம் என்ற கடின இலக்கை நியூசிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 273 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன் னிலை பெற்று உள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில், டிராட் 104 பந்தில் 109 ரன்னை எடுத்து இறுதிவை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கூக் 34 ரன்னையும், பெ ல் 25 ரன்னையும், ஜோ ரூட் 28 ரன்னையும், மார்கன் 21 ரன்னையும், ஆண்டர் சன் 28 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், மெக்லி னாகன் 35 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, வில்லியம்சன் 2 விக்கெட்டும், மில்ஸ், பிரேஸ் வெல், எல். மெக்குல்லம் மற்றும் எலியட்ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக குப்டில் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்