முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணமாகாமல் குழந்தை பெற்றால் அபராதம்: சீனா

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

பீஜிங், ஜூன். 5 - திருமணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் சீனப் பெண்களுக்கு அங்கு பெரும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.அதிக அளவில் அபார்ஷன் மற்றும் குழந்தைகளை தூக்கி வீசி விடும் செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த அபராத முறையை அங்கு கொண்டு வந்துள்ளது சீன மாகாண அரசு ஒன்று. இதுதொடர்பான புதிய சட்டம் ஹூஹான் மாகாணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், திருமணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு சமூக பராமரிப்பு நிதி என்ற பெயரில் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல ஏற்கனவே திருமணமான நபருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் திருமணமாகாத பெண்களிடமும் இந்த நிதி வசூலிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்