ஆகாயத்தில் மொட்டை: விண்வெளி வீரரின் வீடியோ

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 7 - தரையில் செய்யப்படும் அனைத்தையுமே, ஆகாயத்தில் செய்வது மிகக் கடினம். அந்த வகையில், தலை முடியை மழிப்பதற்கு ஆகாயத்தில் என்னென்ன பாடுகள் பட வேண்டி இருக்கிறது என்பதை அப்படியே வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் கிறிஸ் காசிடி.

தனக்குத் தானே மொட்டை அடித்துக் கொள்வதை அப்படியே வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார் கிறிஸ். வீடியோவில், கையில் ஒரு முடி திருத்தும் இயந்திரம் மற்றும் வக்யும் கிளீனரை வைத்துக் கொண்டு தான் செய்பவற்றை அப்படியே விளக்கி சொல்கிறார் அவர்.

புவி ஈ்ர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால், விண்வெளியில் அனைத்து பொருட்களும் மிதக்கும் என்ற அறிவியல் உண்மை ஏற்கனவே அனைஉவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், விண்வெளியில் வெட்டப்படும் முடி ஆகாயத்தில் மிதந்தவாறு தானே இருக்கும் என்ற கவலை மற்றும் கேள்வி உங்கள் மனதில் எழுவதில் வியப்பொன்றும் இல்லை.

ஆனால், அதனை மறுக்கும் கிறிஸ், வாக்வம் கிளீனரோடு இணைத்து முடி வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், அனைத்து வெட்டப்பட்ட முடிகளும் உள்ளேயே சேகரிக்கப்பட்டு விடும் என நம்பிக்கை அளிக்கிறார். கிறிஸ்-ன் இந்த முடி வெட்டும் வீடியோ தான் யூ- டியூப்பில் சக்கை போடு போட்டு வருகிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: