முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

நகரி,மே.- 2 - ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு மீது எதிர்க்கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். ஆந்திர மாநிலம் புலிவந்தலா தொகுதியில் இடைத்தேர்தல்  வருகிற 8 ம் தேதி நடக்க இருக்கிறது. இத்தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலெட்சுமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தெலுங்கு தேச கட்சி சார்பில் வேட்பாளர் ரவி என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவரை ஆதரித்து வாக்கு கேட்க சந்திரபாபு நாயுடு இத்தொகுதிக்கு வந்திருந்தார்.கோமுலஜின்னா என்ற கிராமத்திற்கு நாயுடு செல்ல முற்படுகையில் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரபாபு தடுத்து நிறுத்த முற்பட்டனர். ராஜசேகரரெட்டியும் , ஜெகன்மோகன் ரெட்டியும் உங்களுக்கு என்ன செய்தார்? என்று சந்திரபாபு நாயுடு கேட்கவும் ஆத்திரமடைந்த கிராமக்கள் கற்களைக்கொண்டும் முட்டைகளைக்கொண்டும் தாக்கினர். சந்திரபாபுவைச் சுற்றிலும் வேட்பாளர் ரவியும் தெலுங்கு தேச நின்று கொண்டு பாதுகாப்பு கொடுத்தனர். சில பெண்களை நாயுடு மீது சேற்றையும் வாரி இறைத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏஏற்பட்டது. இதனைக் கண்ட போலீசார் மக்களை எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கட்டுக்கடங்காமல் தாக்குதலில் மீண்டும் மீண்டும் ஈடுபடவே போலீசார் தடியடித்தாக்குதலில் இறங்கினர். தடியடிக்கு பிறகு கூட்டம் கலைந்து சென்றது. பின்னர் கிராமத்திற்குள் செல்லாமல் சந்திரபாபு நாயுடு திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்