முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் மீதான இறக்குமதி வரி 8 சதவீதமாக உயர்வு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.7 - தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை  6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அன்னிய கரன்சி மதிப்புக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அன்னிய கரன்சிகளின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும்.

தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.  தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அதன் மீதான வரியை மத்திய அரசு 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தியது. கடந்த மே மாதம் வெளிநாடுகளிலிருந்து 162 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மேலும் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்