சாம்பியன்ஸ் கோப்பை: இங்கிலாந்து ஆஸ்தி.வை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிர்மிங்ஹாம், ஜூன். 10 - ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித் தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் இயான் பெல் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக, கேப்டன் கூக், டிராட், ரவி பொபாரா, மற்றும் பிரஸ்னன் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 3 முக்கிய விக்கெட்டைச் சாய்த்தார். அவருக்கு ஆதரவாக பிரஸ்னன், பிரா  ட், டிரட்வெல், ஜோ ரூட் மற்றும் பொபாரா ஆகியோர் பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ சார்பிலான 3-வ து லீக் ஆட்டம் பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் நகரில் நடந்தது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணிஆஸ்திரே லிய பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னை எடுத்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பி ற்கு 269 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க வீர ராக இறங்கிய இயான் பெல் சதவாய்ப் பை கோட்டை விட்டார். அவர் அதிக பட்சமாக 115 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். 

அடுத்தபடியாக, ரவிபொபாரா 37 பந் தில் 46 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

தவிர, டிராட் 56 பந்தில் 43 ரன்னையும், கேப்டன் கூக் 30 ரன்னையும், பிரஸ்னன் 19 ரன்னையும், ஜோ ரூட் 12 ரன்னையு ம் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், மெக்கே 38 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்டும் பால்க்னர் 48 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட்டையும் எடுத்தனர். தவிர, ஸ்டார் க், வாட்சன், ஆகியோர்  தலா 1 விக்கெ ட்டும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 270 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற் கு 221 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், கேப்டன் பெய்லி மற்றும் பால்க்னர் இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன் னில் ஆட்டம் இழந்தனர். 

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 134 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. பின்பு பெ ய்லி மற்றும் பால்க்னர் ஆகியோரது ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந் து மீண்டு 200 ரன்னைத் தாண்டியது. 

கேப்டன் பெய்லி 69 பந்தில் 55 ரன் எடு த்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். பால்க்னர் 42 பந்தில் 54 ரன்னை எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். தவிர, வாட்சன் 24 ரன் னையும், ஹியூக்ஸ் 30 ரன்னையும், வா க்ஸ் 15 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 30 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடு த்தார். தவிர, பிரஸ்னன் 2 விக்கெட்டு ம், பிராட் , டிரட்வெல் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத் தனர். இந்தப் போட்டியின் ஆட்டநா  யகனாக பெல் தேர்வு செய்யப்பட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: