முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுகுமுறை - உடன்பாடு ஆகியவற்றை மத்தியரசு ஏற்க கோரிக்கை

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.11 - மாநிலங்களுடன் கூட்டு அணுகுமுறை உடன்பாடு ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்று, மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேசிங் அனுவாலியாவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவரை சந்தித்து தமிழக திட்டங்களுக்கான அனுமதியைப்பெற முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்றார். அங்கு அலுவாலியா வைச்சந்தித்து தமிழக சார்பாக திட்ட வரையரையை முன்வைத்தார்.

திட்டக்குழு துணைத்தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-

நம் தமிழ்நாடு, சிறந்த பங்கீட்டுக் கொள்கையுடன் விரைவான வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வரும் மாநிலம் என்ற வகையில் என்னுடைய அரசு சார்பில் 2013-2014 ஆம் ஆண்டுக்குரிய ஆண்டுத்திட்டம் தொடர்பாக நான் இங்கு விவாதிக்க வந்துள்ளேன்.  2012-2013 ஆம் ஆண்டில் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட, தேசிய அளவிலான உள்நாட்டு பொருளாதார பிரச்சனைகள், இதன்பொருட்டு  செயல்படாத நிலையில் இருக்கும் கொள்கைகள்,  சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு போன்ற பல கடும் இடர்பாடுகள் வகையில் பல சவால்களை எங்களுடைய மாநிலம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.  இத்தகைய இடர்ப்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சி வீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, 2012 - 2013 ஆம் ஆண்டில் வேளாண் துறையின் வளர்ச்சி வீதம் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 4.14 சதவீதமாக இருந்தது.   இருப்பினும்,     12 ஆம் ஐந்தாண்டு திட்டக்காலத்தில் எஞ்சியுள்ள ஆண்டுகளில் உயர் வளர்ச்சிவீதத்திற்குரிய பாதையை உறுதிப்படுத்தும் வகையில் நிலையான முதலீடுகளையும் செலவினங்களையும் நிலைப்படுத்தும் வகையில் இப்பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணும்பொருட்டு அரசு தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டுள்ளது.  என்னுடைய அரசு நிலையான தொடர் முயற்சிகளை அனைத்து துறைகளிலும் மேற்கொண்டு, 2013- 2014 ஆம் ஆண்டிற்குரிய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 11 சதவீத வளர்ச்சி இலக்கை எய்த உள்ளது.  

2. தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களையும், சமூகப்பாதுகாப்பையும் அளிக்கும் பொருட்டு, அனைத்து திட்டங்களை வடிவமைத்து முனைப்பாக செயல்படுத்துவதற்கு  தேவையான அனைத்து ஆதாரங்கள் பெறப்படுவதை உறுதி செய்யும் வகையில் என்னுடைய அரசு கடுமையாக உழைத்து வருகிறது.  2012- 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசு மாநில அரசிற்கு வழங்கும் நிதி உதவி கணிசமாக குறைந்திருந்தபோதிலும், ரூ. 28,000 கோடி என்ற முழு அளவில் ஆண்டுத்திட்ட மூலதனச்செலவை ஏற்பதற்கும் அதற்கும் மேலான தொகையை செலவிடுவதற்கும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  எனவே,  2013-2014 ஆம் ஆண்டில் ரூ. 37,000/- கோடி செலவினங்களுக்குரிய போதிய நிதி ஆதாரங்களை என்னுடைய  அரசு பெற்றுள்ளது என்று மத்திய திட்டக்குழுவிற்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.  என்னுடைய நிருவாகத் தலைமையிலான அரசு தன்னுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் முழுமையான நிதி ஆதாரங்களை கண்டறிந்ததோடு, ஆண்டுத்திட்ட  மூலதனச்செலவிற்கும் மிகையாக நிதிஆதாரங்களை கொண்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதே வளர்ச்சி வீதத்தை நாங்கள் தொடர்ந்து எய்துவோம் என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

3. இருப்பினும், மாநில அரசு தன்னுடைய திட்டங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கு சுயமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறபோதிலும் மத்திய அரசு உறுதியளித்துள்ளவாறு, மாநில திட்டங்களுக்கு ஆதரவு அளிக்காதது குறித்து நான் வருந்துகிறேன்.

2012 - 2013 ஆம் ஆண்டிற்குரிய மத்திய வரவு செலவு திட்ட திருத்த மதீப்பீடுகளில் மாநிலங்களுக்கான திட்டச்செலவினங்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டுத்தொகையை குறைத்திருப்பதே இதற்குச் சான்றாகும்.

உயரளவில் திட்ட ஒதுக்கீடுகளை அறிவிப்பது மற்றும் அடுத்தடுத்து அத்தகைய ஒதுக்கீடுகளை குறைப்பது, திட்டமிடல் மற்றும் வரவு செலவு திட்ட வளர்ச்சி தொடர்பான நம்பத்தன்மையை குறைப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களின் நிதிநிலையையும் திட்டச்செயல்பாட்டையும் இது வெகுவாக பாதிக்கிறது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  2012-2013 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் தமிழ்நாட்டிற்குரிய திட்ட நிதி உதவியாக ரூ.3473.48 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.  இது  இவ்வாறு இருந்தபோதிலும், மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு, மாநிலத்தால் ரூ. 28,000/- கோடியை  ஆண்டுத்திட்ட மூலதனச் செலவாக பெற இயலும் என நான் நம்பியிருந்தேன்.  

மத்திய அரசின் 170 திட்டங்களை 79 திட்டங்களாக ஒருங்கிணைப்பது உட்பட,  மத்திய அரசால் பொறுப்பேற்கும் திட்டங்கள் மற்றும் மத்திய  கூடுதல் நிதியுதவி வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றை சீரமைப்பது தொடர்பாக, அமைச்சர்கள் குழு அண்மைக்காலத்தில் சில பரிந்துரைகளை செய்திருப்பதாக நான் அறிகிறேன்.  இது சதுர்வேதி குழுவின் பரிந்துரைகளை தழுவியிருப்பதாகவும், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மத்திய நிதியுதவியின் அளவை குறைப்பதாகவும் தோன்றுகிறது.  மாநிலங்கள் தங்களுடைய சொந்த செயல்திட்டங்களுக்காக வைத்திருக்கும் நிதியை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மேற்கொண்டும் இந்நிதியை செலவிடாமல் இருக்கும்பொருட்டு அமைச்சர்கள் குழுவின் இப்பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துவதை உறுதிசெய்யுமாறு, துணைத்தலைவரை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஊரகப்பகுதிகளிலுள்ள வறியவர்களுக்கு அவர்களுடைய வாழ்வதாரத்தை பாதிக்கின்ற வகையில், பொதுமக்களுக்கு பாதகமான  மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பொதுமக்கள் ஈட்டுகின்ற வருமானத்தில் மோசமான தொடர்விளைவுகளை ஏற்படுத்தும்,   மத்திய அரசின் நடவடிக்கைகளான, டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்துவது, தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைப்பது, உணவுப்பாதுகாப்பு சட்ட முன்வடிவின்  சில விதித்துறைகள்,  சர்க்கரையின் லெவிமுறையை நீக்குவது ஆகியவற்றை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.   மாநில அரசுகள், மக்களோடு இணைந்து நெருக்கமாக செயல்படுகிறது.  அதிலும் என்னுடைய அரசு இத்தகைய மோசமான விளைவுகளினால் ஏற்படுகின்ற சீர்குலைவிலிருந்து மக்களை பாதுகாக்கும் ஓர் கேடயமான செயல்பாட்டிற்கே முன்னுரிமை வழங்குவருகிறது.  இதனால், மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதை எல்லோரும் நன்கு உணர்வார்கள்.  மக்களின் நலனை, நேரடியாக பாதிக்கக்கூடிய இத்தகைய  முக்கியமான வாழ்வதார பிரச்சனைகள் குறித்த மாநில அரசின் கருத்துக்களுக்கு, மத்திய அரசு செவிமடுப்பதோடு, இதுகுறித்து  உரியவாறு கலந்தாலோசிக்க வேண்டும்.

பொதுமக்களின் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மோசமாக வடிவமைக்கப்பட்ட இத்தகைய திட்டங்களை மாநிலத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.  ாநுகர்வோர்கள்  நேரடியாகப் பயன்பெறும் திட்டம்ா  என்ற அடிப்படையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருதலைப்பட்சமான இத்திட்டமே இதற்கு ஓர் உதாரணமாகும்.  

முதலாவதாக, பொதுவிநியோக முறையின் கீழ், உணவு தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையையும் மற்றும் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் ஏனைய வேளாண்இடுபொருட்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையையும் பணமாக மாற்றி நேரடியாக வழங்கும் நடைமுறையை நாங்கள் வெகுவாக மறுக்கிறோம்.  இத்தகைய இனங்களில், உதவித்தொகையின் அளவை மட்டும் கருத்தில் கொள்ளாமல் முக்கியப்பொருட்களான இத்தகைய பொருட்களை அவர்கள் அணுகி பெறுவதையும், அவை உரிய  நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பெறுவதையும் உறுதிசெய்வதே உகந்தாக அமையும்.  உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்பதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க இயலாது.

இரண்டாவதாக, செயல்பாடுகளை மேம்போக்கான நிலையில் மேற்கொள்ளும் மத்திய அரசின் நிலைப்பாடு, நுகர்வோர்கள்  நேரடியாகப் பயன்பெறும் திட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளை தடுக்கும் தந்திரமான முயற்சிகள் ஆகியவற்றை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்.  

மூன்றாவதாக, நடப்புக்காலத்தில், கண்டறியப்பட்டுள்ள ாநுகர்வோர்கள் நேரடியாகப் பயன்பெறும் திட்டம்ா  தொடர்பாக வடிவமைக்கப்பட்ட 25 திட்டங்கள் குறித்த நடைமுறைச்சிக்கள் பற்றிய பிரச்சனையாகும். எனவே, இத்தகைய எல்லா இனங்களிலும் மத்திய அரசு  நேரடியாக தொகையை வழங்குவது, ஒரு இரட்டிப்பு முயற்சியாகவும், நிதி ஆதாரங்களை வீணாக்குவதுமாக அமையும்.  தற்போது நடைமுறையில் உள்ளதுபோன்று திட்டச்செயல்பாட்டு நிருவாகத்தை புதுதில்லியில் அமைச்சகங்களிடம் விட்டுவிடுவதற்குப் பதிலாக,  மாநில அரசிடமே பொறுப்பை ஒப்படைப்பது உகந்த நடைமுறையாக இருக்கும் என்பது என் சொந்த கருத்தாகும்.

பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க வகையில் பயன்கள் அளிக்கப்படுவதை உறுதிசெய்வதே மத்திய அரசின் நோக்கம் என்ற கருத்தின் அடிப்படையிலான, நம்பிக்கையின் பேரில் வெற்றிக்கான மாற்றுத்திட்டத்தை நான் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். பயனீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து திட்டங்களுக்கும், வங்கிக்கணக்கு நடைமுறை வாயிலாக தொகை வழங்கும் மாநில அரசின் முற்போக்கான திட்டங்களைப்போலவே மத்திய அரசு தங்களுடைய நிதிகளை மாநில அரசு வாயிலாக வழங்க வேண்டும்.  இத்தகைய செயல்பாட்டுத்திட்டங்களின் விவரங்கள் உடனுக்குடன் சரிபார்க்க கிடைக்கப்பெறும் வகையில் மத்திய அரசு இத்திட்டச்செயல்பாடுகளை வெகுவாக கண்காணிக்கலாம்.  

2013 - 2014  ஆம் ஆண்டிற்கு ரூ.37 ஆயிரம் கோடி அளவிலான திட்டங்களை நாங்கள் மேற்கொள்ள கருதியுள்ளோம்.  இது, 2012-2013 ஆம் ஆண்டிற்குரிய திட்ட அளவைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.  ரூ.2.11 இலட்சம் கோடி செலவிலான 12 ஆம் ஐந்தாண்டு திட்ட கால மூலதனச்செலவில், இந்த ஆண்டுத்திட்ட மூலதனச்செலவும் அடங்கும்.  சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகப்பணிகள் குறித்த திட்டச்செலவு 49.3 சதவீதமாக இருக்க, போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற உள்கட்டமைப்பு துறைகளுக்குரிய மூலதனச்செலவும் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

மாநில பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கு  எனது அரசு எடுத்து வருகின்றது. 

2012-2013 ஆம் ஆண்டில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தம்ழ்நாட்டிற்கு 609 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன.  நடப்பு நிதியாண்டில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு நாங்கள் 700 கோடி ரூபாய் கோரியுள்ளோம்.

மாநிலத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை செயல்படுத்த என அரசு முடிவு செய்துள்ளது.  மாநிலத்திற்குள் இரண்டு முக்கியமான நதிநீர் இணைப்பு திட்டங்களை நாங்கள் ஏற்கெனவே செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.  மூன்றாவது திட்டமும் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் கிழ் தயாரிக்கப்பட்ட திட்ட குறிப்புகளில் சுமார் 41,250 கோடி ரூபாய் மதிப்பிலான மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் இணைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பாசன திட்டங்கள் அடங்கும்.  இதற்கு நாங்கள் மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதி ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  

மாநில பொருளாதாரத்தில் தயாரிப்புத் துறை பங்கினை 22 சதவீதத்திற்கு அதிகரிப்பதே தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.  இத்திட்டம், தமிழ்நாட்டை நாட்டிலேயே தயாரிப்புக்கு முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த இடமாகவும், ஆசியாவிலேயே முதல் மூன்று முதலீட்டிற்கு உகந்த இடங்களில் ஒன்றாக திகழச் செய்வதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.  இத்துடன், புதுமையை பேணுவதற்கும், ஊக்கமூட்டுகின்ற ஒழுங்குமுறை சூழலை பெறுவதற்கும், தரமான உட்கட்டமைப்பு வசதி மற்றும் மனிதவள ஆதாரங்களுக்கு வகை செய்வதில் கவனம் செலுத்தப்படும்.

இனிவரும் ஆண்டுகளில், 20,650 ஏக்கர் கூடுதல் நிலப்பரப்பில் 9 பின்தங்கிய தென் மாவட்டங்களில், 9 புதிய தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்.  இந்த பூங்காக்களில் அமைக்கப்படுகின்ற தொழிலகங்களுக்கு முத்திரை தீர்வையை தள்ளுபடி செய்தல், சலுகை விலைகளில் நிலம் வழங்குதல் மற்றும் அதிகரிக்கப்பட்ட மூலதன உதவித் தொகை உள்ளிட்ட சிறப்பு ஊக்க உதவிகளுக்கு வகை செய்யப்படும்.

எனது அரசில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அண்மையில் இத்துறைக்கான செயல்பதட்டு திட்டத்தை நான் அறிவித்தேன்.  குறு, சிறு மற்றம் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான  தளவாடம் மற்றும் இயந்திரத்திற்கான மூலதன உதவித் தொகையானது  25 சதவீதமாக அதிகரிக்கப்படும்.  

தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு அங்கமாக, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திட்டவட்டமான உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியிருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.  இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் உதவிடும் வகையில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகளில் ஒளிவுமறைவற்ற தன்மை (பொது-தனியார் பங்கேற்புகள் கொள்முதல்) விதிகளுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுச் சட்டம், விதிகள் மற்றும் விதிமுறைகள் வடிவிலான கொள்கை கட்டமைப்பு ஒன்றும் முன் வைக்கப்பட்டுள்ளன.  2013-14 ஆம் ஆண்டில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்கு 2000 கோடி ரூபாயும் திட்ட தயாரிப்பு நிதியத்திற்கு 200 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், மின் உற்பத்தியை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு, மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.  காற்றாலைகளிலிருந்து மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு மாநிலம் முழுவதிலுமுள்ள 400 கிலோவாட் மின்அனுப்புகை பெருவிழிப்பாதையானது, 4000 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.  அண்மையில் எனது அரசு புதிய புதிய முயற்சிகளுடன் கூடிய விரிவான சரிய வெப்ப சக்தி கொள்கை ஒன்றை வெளியிட்டது.  

கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு பகுதி - திறன் மேம்பாடு ஆகும்.  தமிழ்நாட்டில் முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறான சிறிய குடுடுமப வரையறையையே எனது அரசும் முழுமையாக அங்கீகரிக்கிறது.  கடந்த  இரண்டாண்டுகளாக ஒருங்கிணைந்த நகர்ப்பகுதி மேம்பாட்டு இயக்கம், சென்னை பெருநகர மேம்பாடு இயக்கம் ஆகிய இரு பெரும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.   முதல் இரண்டாண்டுகளுக்காக ரூ.2500 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலம் எனும் உயரிய நோக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.  அரசு இதற்காக , மூன்றாண்டு விரிவான திட்டத்தை வரையறை செய்துள்ளதோடு,  2011-12 ஆம் ஆண்டிலிருந்து நகர்பகுதிகளில் உள்ள திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இத்திட்டம் ரூ.72.60 கோடி முதலீட்டுடன் 2013-14 ஆம் ஆண்டிலும் தொடரப்படும்.    பொது கழிப்பறை வசதிகளை அதிகரிப்பதும், மக்களிடையே நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டடத்தின் நோக்கங்களாகவும்.  கிரரமப்பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு இயக்கத்தின் கீழ் தனிக் கழிப்பறை கட்டுவதற்கான செலவுத் தொகை ரூ.5000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தின் கூடுதல் பங்களிப்பு, மகாத்மாகாந்தி தேனசிய ஊரக வேலைவாய்ப்பு புறதித் திட்டதிலிலிந்தும் என சேர்ந்து, கழிப்பறை ஒன்றுக்கு ரூ.11,000/- ஐ எங்கள் மாநிலத்தில் வழங்கப்படுகிறது.   கிராமங்களில் மகளிருக்கான சுகாதார வளாகம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.  இஇதபோன்று ஆடவருக்கும் சுகாதார வளாகத்தை எனது அரசு ஏற்படுத்தி வருகிறது.  இம்முயற்சிகளின் பயனாக, 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு , திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லை என்ற நிலையை ஏற்ற்டுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த கடல்நீரை குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ரூ.210 கோடி அளவுக்கு கூடுதலாக மத்திய நிநியுதவி வழங்குமாறு மத்திய திட்டக்குழுவை நான் கேட்டுக் கொள்கின்றேன்.    

2013-14-ஆம் ஆண்டுக்கான மத்திய கூடுதல் நிதியுதவிக்கான செயற் குறிப்புகளை வைப்பதுடன், 2012-13 ஆம் ஆண்டிற்கான மத்திய கூடுதல் நிதியுதவி பெறப்படவில்லை என்பயைம் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.   ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தம் ரூ.160 கோடி ரூபாயில், மத்திய  திட்டக் குழு ரூ.128.63 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது.  எஞ்சிய ரூ.31.37 கோடி ரூபாய் கடந்த நிதி ஆண்டில் வழங்கப்படவில்லை.  மத்திய கூடுதல் நிநிததயதவி வழங்காதது குறித்து மாநில முதல் அமை.ச்ச்ாகளுடனான துணைத்தலைவர் அளவிவில மத்திய திட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டது  ஒரு முக்கியமான ஒர பிரச்சினையாகும். இது குறித்த எங்களுடைய துயரத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்வீவீாகள் என்றும், இத்தகைய  பிறழ்ழ்சசிசைய உடனனடியாக நீங்கள் சரிசெய்து, மத்திய கூடுதல் நிதியுதவியை நடப்பாண்டில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.  

நான் எனது உரையை நிறைவு செய்வதற்கு முன், மத்திய திட்டக்குழுவின் குறிப்பிடப்பட்ட முக்கியமான திட்ட நடவடிக்கைகள், நாட்டி. வளர்ச்சிப் பாதையில் அதன் முக்கியமான பங்கு ஆகியவற்றை அது சிறப்புடன் திறம்பட செயல்படுத்த வேண்டுமென நான் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.  மக்களுக்காக சிறந்த, விரும்பத்தகுந்த முடிவுகளை உறுதிசெய்வதற்கு, மாநிலங்களுடன் கூட்டு அணுகுமுறை, உடன்பாடு அடிப்படையிலானவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  

இந்த ஆண்டு, அலுவல் ரீதியிலான விவாத முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றமானது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய மேம்பாடு ஆகும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  சிறந்த மாநிலத்தின் பேரார்வம், செயல் வல்லமைகளை புரிந்து கொள்வவற்கு மத்திய திட்டக்குழு மற்றும் மத்திய அரசின் ஏனைய அமைச்சகங்கள் ஆகியவற்றிக்கு இது துதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.   மாநிலத்தின் புதுமையான திட்டங்களை உருவாக்குவதில், நெகிழ்வுத்தன்மைக்காக அதிகளவில் பிரிக்கப்பட்ட நிதியை அனுமதிப்பதற்கு இது வழிவகுக்க வேண்டும்.  இதன் மூலம் விரைவான அனைத்தையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்க இயலும்.   

இந்த வாய்ப்பினை வழங்கிய ஆணையத்திற்கு / குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.    

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்