மே.இ.தீவை வீழ்த்தி இந்தியா அரை இறுதியில் நுழையுமா?

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 11 - ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக் கெட் போட்டியில் ஓவலில் இன்று நட க்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தி யா, மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழையுமா? சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்போட்டி இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் 8 அணிகள் கோப் பைக்காக களம் இறங்கி உள்ளன. தற் போது லீக் போட்டிகள் நடந்து வருகிறது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு ஆகிய 2 அணிகளும் தங்களது முதல் லீக்கில் வெற்றி பெற்று அடுத்த போட்டியில் சந் திக்க ஆயத்தமாக உள்ளன. 

இந்திய அணி தனது முதல் லீக்கில்  தெ ன் ஆப்பிரிக்க அணியுடன் கார்டிப் நக ரில் மோதியது. இதில் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கேப்டன் டிவைன் பிராவோ தலைமை யிலான மே.இ.தீவு அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சந் தித்தது. இதில் மே.இ.தீவு அணி 2 விக் கெட் வித்தியாசத்தில் வென்றது. 

முதல் போட்டியில் இந்தியா மற்றும் மே.இ.தீவு ஆகிய 2 அணிகளும் வித்தி யாசமான முறையில் வெற்றி பெற்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு உறுதி யாகும். 

சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போ  ட்டியில் இந்திய வீரர்களுடன், மே.இ.தீவு முக்கிய வீரர்களும் பங்கு கொண்டனர். எனவே இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவர். 

இந்திய அணியின் கேப்டனான தோனி யும், மே.இ.தீவு அணியின் கேப்ட னான டிவைன் பிராவோவும் சென் னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்றவர்கள். 

மே.இ. தீவு அணியின் துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் மற்றும் விராட்கோக்லி  இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூர் அணியில் கலந்து கொண்டவர்கள். 

எனவே இரு அணியில் உள்ள முக்கிய வீரர்களின் பலம் என்ன, பலவீனம் என் பது குறித்து வீரர்கள் நன்கு  அறிவர். 

ஆனால் இன்று நடக்க இருக்கும் போ  ட்டி தனிப்பட்ட அணிகளுக்கு இடை யேயான போட்டி அல்ல. நாட்டின் கெளரவத்திற்கான போட்டியாகும். 

இரு அணிகளையும் ஒப்பிடும் போஉ, இந்திய அணிக்கு அதிக வெற்றி வாய்ப் பு இருப்பதாக தெரிய வருகிறது. இந் தியஅணி இங்கிலாந்து சூழலில் தொ டர்ந்து 3 ஆட்டங்களில் (பயிற்சி ஆட்டம் உள்பட) 300 -க்கும் மேற்பட்ட ரன் னை எடுத்து உள்ளது. 

முதல் போட்டியில் இந்திய அணியினதுவக்க வீரர்களான ஷிகார் தவான் மற் றும் ரோகித் சர்மா இருவரும் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். 

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 127 ரன்னைச் சேர்த்து அணிக்கு நல்ல அஸ் திவாரத்தை கொடுத்தது. இதனால் இந்தியா 300 ரன்னைத்  தாண்டியது. 

கார்டிப் நகரில் நடந்த முதல் ஆட்டத் தில் வெற்றி பெற்ற இந்திய அணியில் எந்த வித மாற்றமும் இருக்காது. அதே அணி நீடிக்கும். 

மே.இ.தீவு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியில் சாமுவேல்ஸ் நல்ல பார்மில் இருக்கிறார். தவிர, கெய்ல், பொல்லார்டு மற் றும் பிராவோ ஆகிய சிறந்த பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: