முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 60 யாத்ரீகர்கள் பலி!

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன்.18 - உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெ ள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கனமழை காரணமாக உத்தர்காசியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் நிலச்சிரிவில் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ்டுபட்டுள்ளனர். யாத்திரை வரவேண்டாம் இதனிடையே, யாத்ரீகர்கள் யாரும் உத்தர்காசி வர வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உறவினர்கள் யாராவது யாத்திரை சென்றிருந்தால் அவர்களைப் பற்றி அறிய 0135-2710334, 0135-2710335, 0135-2710233 ஆகிய தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் கனமழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள பக்தர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், தர்மசத்திரங்கள் நிரம்பி வழிகின்றன. மோசமான வானிலை காரணமாக கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்