முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதீஷ்குமாருக்கு மோடி காய்ச்சல்: பா.ஜ.க. கிண்டல்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

பாட்னா, ஜூன். 22 - பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு அடிக்கடி மோடி காய்ச்சல் வருவதாக பா.ஜ.க கிண்டலடித்துள்ளது. பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பாட்னாவில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, குஜராத் முதல்வர் மோடி பற்றி நிதீஷ்குமார் அடிக்கடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருடைய பேச்சுக்களில் இருந்து நிதீஷ்குமாருக்கு மோடி காய்ச்சல் இருப்பது தெளிவாக தெரிகிறது. நிதீஷ் உடனடியாக ஒரு நல்ல டாக்டரை பார்க்க வேண்டும். மோடியை பார்த்து ஏன் அவர் பயப்பட வேண்டும். தனது அரசை காப்பாற்றுவதற்காக திடீரென்று அவர் காங்கிரஸ் மீது காதல் கொண்டுள்ளார். அவருடைய பதவியை காப்பாற்றுவதற்காக காங்கிரசிடமும், சுயேட்சைகளிடமும் நிதீஷ் உடன்பாடு செய்து கொண்டார். பீகாரில் நிதீஷ்குமாரும், லல்லுவும் ஒரே குணம் படைத்தவர்கள் என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்தாகும். இருவரும் பதவிக்காக எதையும் செய்யக்கூடிய சந்தர்ப்பவாதிகள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்