முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் இருந்து வகுப்பு எடுத்த முதல் சீனப்பெண்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஜூன். 22 - பூமியை சுற்றி வரும் விண்வெளி நிலையமான டியான்காங் - 1 லிருந்து சீன விண்வெளி வீராங்கனையான வாங் யாபிங் புவியில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். வாங்யாபின் சீன மாணவர்களுக்கு விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அறிவியல் வகுப்பை சுமார் 45 நிமிடம் எடுத்தார். இதனால் சீனாவின் முதல் விண்வெளி ஆசிரியை என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

விண்வெளியில் ஏற்படும் எடையிழப்பு மற்றும் அதனால் புவியீர்ப்பு சக்தியின் பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி நேரடியாக 330 பள்ளிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனை சுமார் 6 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தனர். இவர் சீனாவின் 2 வது விண்வெளி வீராங்கனையாவார். சீனாவின் விண்வெளி நிலையமான டியான்காங்குக்கு வாங்யாபிங் உள்ளிட்ட 3 பேர் சமீபத்தில் ஷென்ஸென விண்கலத்தில் சென்றனர். சீனா தனக்கென விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த நிலையம் 2020 ம் ஆண்டு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்