முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருக்குலைந்து போனது உத்தரகாண்ட் சாலைகள்- பாலங்கள்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன். 22 - வரலாறு காணாத மழை வெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலமே உருக்குலைந்து போயுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 1100 சாலைகள், 94 பாலங்கள் அடியோடு காணாமல் போய் விட்டன. இதுவரை இல்லாத மிகப் பெரிய சீரழிவை சந்தித்துள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம். பயங்கர வெள்ளம் மற்றும் தொடர் மழையால் மாநிலத்தின் பல பகுதிகள் சீர்குலைந்து கிடக்கின்றன. இதுவரை வெள்ள மதிப்பு முழுமையாக மதிப்பிட முடியாத நிலையே காணப்படுகிறது. இதுவரை 1100 சாலைகள் சேதமடைந்துள்ளன. 94 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. எங்கு பார்த்தாலும் நிலச்சரிவு மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் பெருமளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ருத்ரபிரயாக் பகுதியில் மட்டும் 26 பாலங்கள் சேதமடைந்து போய் விட்டதாம். இதை சரி செய்ய 2 அல்லது 3 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்கிறார்கள்.

உத்தரகாண்ட் மாநில அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடி தருவதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் ஹெலிகாப்டர்கள் மூலம் போட ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெள்ள பாதிப்பிலிருந்து தங்களது மாநிலம் மீண்டு வர 3 ஆண்டுகள் வரை ஆகும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. பத்ரிநாத்தில் இன்னும் தவிக்கும் 70,000 பேர் கேதார்நாத்தில் தற்போது முழுமையாக மீட்புப் பணிகள் முடிந்து விட்டதாம். தற்போது பத்ரிநாத்தில் பாதுகாப்புப் படையினரின் கவனம் திரும்பியுள்ளது. அங்கு இன்னும் 70,000க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். மேலும் அவசர உதவிக்கு ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தரகாசி - 01374-226126, 226161, சமோலி - 01372-251437, தேஹ்லி - 01376-233433, ருத்ரபிரயாக் - 01732-1077

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்