முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - சீன பங்கு சந்தைகள் சரிவு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

ஹாங்ஹாங், ஜூன் - 25 ​- சீனாவின் பங்கு சந்தைகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை எதிர்கொண்டிருக்கிறது. சீனாவின் மக்கள் வங்கி நாளை முதல் மேற்கொள்ளப் போகும் சில நடவடிக்கைகளால் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. ஷாங்காய் பங்குச் சந்தை 5.3மூ சரிவை எதிர்கொண்டது. இது கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-க்குப் பிந்தைய முதல் சரிவாகும். சிஎம்பிசி உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 10மூ வரை சரிவை எதிர்கொண்டிருக்கின்றன. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளிலும் சரிவு எதிரொலித்தது. இந்திய பங்குச் சந்தையும் 233 புள்ளிகள் சரிந்து 18540 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. நிடிப்டி 77 புள்ளிகள் சரிந்து 5590 புள்ளிகள் என்ற நிலையில் சரிவில் இருந்தது. கோட்டாக் வங்கி, ஆசியன் பெயிண்ட், ரேன்பாக்ஸி ஆகியவற்றின் நிறுவனப் பங்குகள் நட்டத்தைச் சந்தித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்