முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் பதவிக்கு ராகுல் பெயரை பயன்படுத்த விரும்பவில்லை

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.27 - 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் தனிநபர் பெயரை பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் பயன்படுத்துவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதாவது, பிரதமர் பதவிக்கு ராகுல் பெயரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே போட்தான் போட்டி என்பதைத் தவிர்க்க காங்கிரஸ் கட்சி உத்தேசித்துள்ளது. இதுபோன்று முக்கியமாக எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி பிரமுகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவித்தன. அதாவகு 2014-ம் ஆண்டு நடைபெறும் பிரதமர் வேட்பாளருக்கான தேர்தலில் தனிநபர் அதாவது மோடிக்கும், ராகுலுக்கும் போட்டி என்பதை தவிர்க்கவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.  

தனிநபருக்குள் தான் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொருவருடைய தரம், அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும்.   அந்த அடிப்படையில் போட்டி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறினார். டெலிவிஷன் மற்றும் கருத்தரங்குகளில் அதிகாரப் பூர்வமாகப் பங்கேற்பவர்களுக்காக நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றிய வாசகத்தை காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் அஜய் மக்கன் வாசித்தார்.

  உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தில் சிக்கியவர்களில் மற்ற மாநிலத்தவரை உதாசீனம் செய்துவிட்டு,   குஜராத் மாநிலத்தவரை மட்டும் நரேந்திரமோடி மீட்டு வந்தார். இதை மிகைப்படுத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மோடி நியாயமானவர், அவர் அனைவருககும் பொதுவான ஈடில்லாத தலைவர் என்று பாஜக கூறி வருகிறது. இதன்மூலம் மோடியின் நற்பெயருக்குக் களங்தம் விளைவிப்பது என்றும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

  பத்திரிகைதளில் இதை பெரிதுபடுத்துவது. குஜராத் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மோடி கூறுவது பொய்யாகும். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் மோடியும், ராகுல் காந்தியும் தனித்தனியாக பேசியதை மக்கள் நன்கு அறிவார்கள்.  

மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்  இந்தஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, எல்லா மாநிலங்களிலும் இதையே பேசுவது என்றும் கட்சி தீர்மானித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்