முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருக்கலைப்புக்கு எதிரான மசோதா தோற்கடிப்பு

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

ஆஸ்டின்(யு.எஸ்), ஜூன்.28  - குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள டெக்சாஸ் சட்ட பேரவையில், கருக்கலைப்பு மையங்களுக்கு எதிரான அரசின் மசோதாவை ஜனநாயகக் கட்சியின் வெண்டி டேவிஸ் ஒற்றை ஆளாக 11 மணிநேரம் பேசியே தோற்கடித்து சாதனைப் படைத்தார். கருக் கலைப்பு மையங்களுக்கு எதிரான மசோதா ரெட் நெக் ஸ்டேட் என்று அழைக்கப்படும். குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸில் சுமார் 45 கருக்கலைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருக் கலைப்புக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட வலது சாரி குடியரசுக் கட்சியினர், இந்த மையங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் புதிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தனர். அதன் மூலம் கருக்கலைப்பு மையங்கள், பெரிய மருத்துவமனைகளுக்கு நிகரான, நவீன அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் ஏனைய வசதிகள் கொண்டதாக மாற்றப்பட வேண்டும். 

இதன் மூலம், கூடுதல் செலவை ஏற்றுக்கொள்ள முடியாத மையங்கள் தானாகவே மூடப்படும் நிலை ஏற்படும். தனியாளாகப் போராடிய பெண் செனட்டர் டெக்சாஸில் பல்வேறு மாநிலங்களிலுருந்தும் புதிதாக குடியேறி வருபவர்களால், ஜனநாயகக் கட்சி வலுப்பெற்று வரும் நிலையில் வெண்டியின் போராட்டம், கட்சியினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் குடியரசுக் கட்சியின் கோட்டையாக இருந்தடிப்ளோரிடா மாறியது போல், விரைவில் டெக்சாஸும் கடும் போட்டி மாநிலமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையுடன் ஜனநாயகக் கட்சியினர் செயல்படுகின்றனர். தற்போதைய டெக்சாஸ் செனட் அவையில் 12 பேர் ஜனநாயகக் கட்சியினர், மீதி 19 பேர் குடியரசுக்கட்சியினராகும். 150 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் அவையில், 55 பேர் மட்டுமே ஜனநாயக் கட்சியினராவர். எப்படிப் பார்த்தாலும் மெஜாரிட்டியுடன் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். ஆனால் டிபிலிபஸ்டர் என்ற ஒரு விதியின் படி, தீர்மானத்திற்கான நேரம் முடிவடையும் வரையிலும், யாராவது ஒரு உறுப்பினர் தீர்மானம் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், நேரம் முடிவடைந்து தானாகவே தோற்று விடும். 11 மணி நேரம் டிபிலிபஸ்டர் கருக்கலைப்பு மையங்களுக்கு எதிரான இந்த தீர்மானத்தை முறியடிப்பதற்கு, டல்லாஸ்-போர்ட்வொர்த் பகுதியைச் சார்ந்த செனட்டர் வெண்டி டேவிஸ், டிபிலிபஸ்டர் விதியை கையிலெடுத்தார். கிட்டத்தட்ட பதிமூன்று மணி நேரம், அந்த தீர்மானம் மீதான விவாதத்தை அவர் தொடந்து பேசியாக வேண்டும் என்ற நிலையில், யாரும் இல்லாத சபையில் மைக்கை கையில் பிடித்தார். பதினோரு மணி நேரம் பேசிய நிலையில், மூன்று தடவை வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவி விட்டார் என சபை தலைவர் அவரை நிறுத்தி விட்டார். ஆனாலும் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த் ஆதரவாளார்கள் கூக்குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த கூச்சல் குழப்பத்தில் தீர்மானத்தில் வாக்களிக்க முடியாமல் நேரம் கடந்து விட்டது. கடைசியில் தீர்மானம் நிறைவேறாமல் முறியடிக்கப்பட்டு விட்டது. வெண்டி டேவிஸ் டிபிலிபஸ்டரை ஆரம்பித்த செய்தி அறிந்து சமூக தளங்களில் செய்தி பரவத் தொடங்கி, அமெரிக்கா முழுவதும் பரபரப்பானது. வெளி நாடுகளிலும் செய்தி பரவியது. ஒரே நாளில் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் வெண்டி டேவிஸ் கதாநாயகியாகி விட்டார். அதிபர் ஒபாமவும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்